மகிமைப்படுத்தப்பட்ட இயேசு GLORIFIED JESUS Phoenix Arizona U.S.A. 55-02-25 பீனிக்ஸ், அரிசோனா, அமெரிக்கா. 1. மாலை வணக்கம் நண்பர்களே. இன்றிரவு கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் இங்கு ஊழியம் செய்ய மறுபடியுமாக இங்கே இருப்பதற்காக நான் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன். சகோதரர் பல்லார்ட் மற்றும் அங்கே இருந்த ஊழியர்கள் கீழே பார்த்துக் கொண்டு சிரித்துக் கொண்டிருந்தார்கள், எதற்காக அவர்கள் சிரித்துக் கொண்டிருந்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை. அப்போது சகோதரர் பல்லார்ட் மிக அழகான சிறிய இந்திய குழந்தையை என்னிடம் கொண்டு வந்தார், அது சுமார் இந்த அளவு உயரம் இருந் தது, அது இருந்து தரையில் மெதுவாக ஒரு வாத்து போல அசைந்து அசைந்து விளையாடிக் கொண்டிருந்தது. அது மிகவும் அருமையான ஒன்றாகும். அது.. கடந்த முறை இந்தியர்களுக்கென (அமெரிக்க செவ்விந்தியர்கள்) ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் இருந்த போது, ஒரு இந்தியப் பெண்மணி தனது முதுகில் ஒரு சிறிய கூடையில் ஒரு குழந்தையுடன் வெளியே வந்தாள், நான் அக்குழந்தையுடன் சிறிது விளையாடினேன். நான், "அதை எனக்கு கொடு... அதை எனக்குக் கொடுப்பீர்களா?" என்று கூறினேன். ஓ, என்னே, அவள் கண்கள் பிரகாசித்தன. சரி, ஆனால் குழந்தையை மட்டும் எடுத்துக் கொள்ளாதீர்கள் என்பதாக இருந்தது. 2. சரி, கர்த்தருக்கு சித்தமானால், நாளை பிற்பகல் இரண்டு மணிக்கு அமெரிக்க இந்தியர்களுக்கென (செவ்விந்தியர்கள்) ஒதுக்கப்பட்டுள்ள வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய வார்த்தை குடியிருப்பு பகுதிக்கு நாங்கள் செல்கிறோம், உண்மையான அமெரிக்கனாகிய அந்த இந்தியர்களுக்கு ஊழியம் செய்ய நாங்கள் செல்கிறோம். கர்த்தர் ஸ்தோத்தரிக்கப்படுவாராக. ஏழு வருடங்களுக்கு முன்னர் நாங்கள் நடத்தின ஒரு கூட்டத்தைப் போலவே மறுபடியும் ஒரு கூட்டம் எங்களுக்கு இருக்கும் என நாங்கள் நம்புகிறோம். நான் உங்களுக்கு கூறுகிறேன், அந்த கூட்டத்தைப் போன்ற வேறே ஒரு கூட்டமானது; இதுவரை நான் நடத்தின எல்லா கூட்டத்தைக் காட்டிலும் அதைப் போன்ற ஒரு கூட்டம் இதுவரையிலும் எனக்கு இருந்ததில்லை; அந்த செவ்விந்திய மக்களின் தாழ்மையான விசுவாசம். நான் ஏதாவது ஒரு நாளிலே அமெரிக்கா முழுவதுமாக பிரயாணம் செய்து செவ்விந்தியர்களுக்கென ஒதுக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளுக்கு மாத்திரம் சென்று, அந்த அமெரிக்க செவ்விந்தி யர்களுக்கு ஜெபம் செய்து அவர்களுடைய ஒவ்வொரு குடியிருப்பு பகுதிகளுக்கும் செல்வேனாக என்று நான் அநேக முறைகள் நினைத்ததுண்டு. நான் மிஷனரிமார்களை கூட்டுவேனானால், ஒருக்கால், அவர்கள் என் ஊழியத்தை ஆதரிக்கிறோம் என்று அவர்களிடம் கூறும்படிக்குச் செய்வேனானால் - என்னால் அதற்குள்ளாக செல்ல முடியும். அவர்கள் எனக்கு பண ஆதரவு தர வேண்டியதில்லை, ஆனால் நான் கூற விழைவது, அவர்கள் தாமே அந்த அமெரிக்க செவ்விந்தியர்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்வார்களானால்..... 3. சிறிது காலத்திற்கு முன்பு, கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில், அங்கே நாங்கள் ஒரு மகத்தான கூட்டத்தை நடத்தினோம். இப்பொழுது நாங்கள் அங்கே செல்ல விருக் கின்றோம், அங்கே ஸ்டாக் எக்சிபிட் அரங்கில் அநேக அநேக பல ஆயிரக்கணக்கான மக்கள் கூடி வந்திருந்தனர். ஒரு இரவு, நான் கவனிக்க நேர்ந்தது, ஓ, கூடிவந்திருந்த மக்கள் கூட்டத்தினரில் திரளானவர்கள்.... லிட்டில் பிக் ஹார்ன் ரிவர் பகுதியிலிருந்து வந்திருந்த க்ரோ இந்தியர்களாக இருந்தனர் (Crow Indians) அப்பொழுது நான் "ஓ....." என்று நினைத்தேன். அதற்கு பிறகு சில நாட்கள் கழித்து நான் கனடா சென்று கொண்டிருந்த போது அந்த செவ்விந்திய குடியிருப்பு பகுதியினூடாக சென்றேன். அப்போது நான், "அந்த மக்களுக்காக நான் நிச்சயமாக ஒரு கூட்டத்தை நடத்த விரும்புகிறேன். அவர்கள் மிகவுமாக விசுவாசத்தில் எளிமை யுள்ளவர்களாக இருக்கின்றார்கள், அப்படியே விசுவாசிக்கிறார்கள். அவர்கள் எதையுமே மனதில் யோசித்து பார்த்து கருத்துக்களை கொண்டிருப்பதில்லை. அவர்கள் உன் வார்த்தையை அப்படியே நம்புகிறார்கள், முன்னே போகின்றார்கள்" என்று நினைத்தேன். எனக்கு அது பிடிக்கும். நாம் அந்த இடத்திலிருந்து சீக்கிரமாக வந்து விட்டோமே" என்று நினைத்தேன். ஆம், ஐயா. அந்த எளிமையானது. 4. இப்போது, ஞாயிறு பிற்பகல் ஆடிட்டோரியம் ஆராதனைகள் நடக்கவிருக்கின்றது, அதுவரைக்கும் இன்றிரவானது கடைசி இரவு கூட்டமாக இருக்கும், ஏனென்றால் நம்முடைய அன்புக்குரிய நண்பர்களான ஷ்ரைனர்கள் குழுவினர் அவர்களுடைய அரங்குகளை சனிக்கிழமை இரவு உபயோகிக்கின்றனர். ஆகவே நாம் நிச்சயமாக அவர்களுக்கு மதிப்பு அளிக்கும் விதமாக நாம் சிறிது நிறுத்துகிறோம், ஆதலால் அவர்கள் தங்கள் நிகழ்ச்சிகளை நடத்த ஏதுவாக இருக்கும், அதை நாங்கள் மகிழ்ச்சியுடன் செய்கின்றோம். கர்த்தர் அவர்களை ஆசீர்வதிப்பாராக, என்பதே எங்கள் உத்தமமான ஜெபமாகும். நான் இப்பொழுது - இப்பொழுது பட்டணத்தில் நடந்த சில கூட்டங்களை கண்டேன்; "எழுப்புதல் கூட்டங்கள்" என்ற அறிவிப்பு பலகைகள் நிறைய இருப்பதை நான் காண்கிறேன். நீங்கள் எழுப்புதல்களைக் கொண்டிருக்கின்ற இடங்களிலே கூட்டம் நடத்த விரும்புவீர்களானால், அதை நாங்கள் அறிவிப்பு செய்வதில் மகிழ்ச்சி கொள்வோம். 5. இன்று காலை நான் காலை கூட்டத்திற்காக அசெம்பிளிஸ் ஆஃப் காட் சபையில் இருந்தேன், அங்கு எங்களுக்கு வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய வார்த்தை அருமையான ஒரு ஆராதனை இருந்தது. அங்கே சுவிசேஷகர் பேசினதை நான் கேட்டுக் கொண்டிருந்தேன். அந்த மனிதனின் பெயரை என்னால் திரும்ப ஞாபகப்படுத்த முடியவில்லை. (யாரோ ஒருவர், "ஹாகின்" என்று கூறுகிறார் - ஆசி.] ஹாகின், சகோதரர் ஹாகின். மிகவும் நம்பத்தகுந்த போதகர்... பாஸ்டர், ஒரு அருமையான மனிதர், நாங்கள் தொடர் கூட்டங்களை நடத்திக் கொண்டிருந்த போது அவர்கள் எழுப்புதல் கூட்டத்தை வைத்ததற்காக மிக மிக வருந்தினர். ஆனால் அவர்கள் அதை ஒரு வருடமாக நடத்தினர். ஆதலால் அவர்கள் தொடர்ந்து அதை நடத்த வேண்டியதாயிற்று. ஆகவே அது முற்றிலும் சரியானதாகும். ஆனால், நம்முடைய அன்பை அவர்களுக்குக் காட்ட நாங்கள் விரும்புகிறோம், நாங்கள் அவரை நேசிக்கின்றோம் என்று காண்பிக்க விரும்புகிறோம். கர்த்தருடைய வேலையில் நாம் வித்தியாசமாக பிரிந்திருப்பவர்கள் அல்ல. நாம் எல்லாரும் ஒன்றாக இருக்கிறோம், ஒரே சரீரமாக, நாம் முன் சென்று கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு காலையிலும், பத்திலிருந்து பதினொரு மணி வரை, அவர்கள் அங்கே ஆராதனைகளைக் கொண்டிருக்கிறார்கள்... சகோதரர் ஹாகின், இன்று காலை தெய்வீக சுகமளித்தலைக் குறித்து போதிக்கின்றார், அதில் அற்புதமான ஒரு செய்தி இருந்தது. நான் நிச்சயமாக அதை பாராட்டுகிறேன். அந்த சகோதரனிடம் முதன் முதலாக நான் கைகளை குலுக்க நேர்ந்த போது, அவர் ஒரு அருமையான பெரிய மனிதன் என்று அறிந்து கொண்டேன். 6. இங்கே, "ஜீவனுள்ள தேவனுடைய சபை" என்று அழை க்கப்படும் ஒரு சிறிய இடத்தைக் கண்டேன். அவர்கள் ஒரு எழுப்புதலை கொண்டிருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். அவர்களுடைய மேய்ப்பர், பாஸ்டர் யார் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால், "ஒவ்வொரு மாலையும் ஆராதனைகள் இருக்கும்" என்றார். அவர்களுடைய ஆராதனை நேரம் என்ன -- என்ன நேரம் என்று எனக்கு தெரியவில்லை. ஞாயிற்றுக்கிழமை இங்கே இருப்போம். மேலும் நான்... வெளி ஊர்களில் இருந்தும், வெவ்வேறு இடங்களிலிருந்தும் வந்துள்ள வெளியூர் நபர்களாகிய நீங்கள், இங்கே உள்ள இந்த நல்ல சபைகளுக்கு செல்லுங்கள். இங்கே மேடையில் உள்ள மேய்ப்பர்கள், இங்கே ஃபீனிக்ஸ் நகரத்தின் சகோதரத்துவத்தை பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள்... மேலும் ஞாயிற்றுக்கிழமை காலை எங்காவது ஒரு நல்ல இடத்தை பார்த்து ஒரு சபைக்கு செல்லுங்கள். தேவனுக்கு சித்தமானால், ஒரு சுவிசேஷ செய்திக்காக நாங்கள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இங்கு வருவோம். தேவன் அதை எங்களுக்கு அருளுவார், ஞாயிறு ஆரம்பித்து, சுகமளிக்கும் ஆராதனைகளை தொடர்ந்து வருகின்ற செய்வாய்க்கிழமை முடிக்கலாம், நான் யூகிக்கிறேன், இல்லை புதன்கிழமை வரை - ஆம் புதன் வரைக்குமாக, வருகின்ற புதன்கிழமை வரை நடைபெறும். 7. வியாழக்கிழமை காலை லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஏஞ்சல்ஸ் டெம்பிலுக்கு சகோதரர் ரோல்ஃப் மெக்பெர்சன் மற்றும் சகோதரர் டீஃபோர்டு ஆகியோருடன் ஐந்து இரவு ஆராதனைக்காக நாங்கள் புறப்படுகிறோம், அங்கிருக்கும் பாஸ்டர், மேய்ப்பர். மேலும் அது தாமே.... அக்கூட்டங்கள் சுவிசேஷக கூட்டங்கள் அளவிற்கு நடக்க உள்ளது. அதன் பிறகு கிறிஸ்தவ வியாபாரிகள், சர்வதேச முழு சுவிசேஷ கிறிஸ்தவ வியாபாரிகள் சங்கம், ஸ்டாக் எக்சிபிட் இடத்தில் ஒரு கூட்டத்திற்காக பொறுப்புகளை ஏற்றுள்ளனர். கட ந்த ஆண்டு நாங்கள் இருந்த டௌனி மற்றும் சௌவுத் கேட் இடையில் உள்ளது என்று நான் நினைக்கிறேன். நீங்கள் அந்த சுற்று வட்டாரங்களில் வசிப்பீர்களானால், அங்கே சில நண்பர்களைக் கொண்டிருப்பீர்களானால், அவர்களைக் காணவும், கர்த்தருடைய நாமத்தில் ஊழியம் செய்ய நாங்கள் மகிழ்ச்சி கொள்கிறோம். இப்போது, நாளை, நீங்கள் தாமே (அக்கூட்டத்தில் பொதுமக்களும் கலந்து கொள்ளலாமா, எனக்குத் தெரியவில்லை) இந்தியர் குடியிருப்பு (அமெரிக்க செவ்விந்தியர்கள்) பகுதிக்கு மற்றும் அப்பாச்சி இந்தியர்களிடத்திற்கு (Apache Indian) நாளை பிற்பகல் செல்வீர்களானால். "நவாஜோ" என்று அழைக்கப்படும் இன்னொரு பழங்குடியினர் உள்ளனரா? ஒருக்கால் அவர்களுடைய குடியிருப்பு பகுதிக்கும் சென்று மிஷனரியை அழைத்து ஒரு நேரத்தை குறித்துக் கொள்ளலாம் அல்லவா 8. இப்போது, இன்றிரவு, நான் அது ஒரு நல்ல காரியமாக இருக்கும் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன்... இங்கே கட்டடத்தில் எத்தனைப் பேருக்கு ஜெப அட்டைகள் உள்ளது, உங்கள் கரங்களை நான் காணட்டும், ஜெப அட்டைகள், எல்லா இடங்களிலும் உள்ளவர்கள் உயர்த்துங்கள்? நல்லது, அது ஒரு நல்ல எண்ணிக்கையாகும். இப் பொழுது, ஜெப அட்டைகள் உள்ளவர்கள் எல்லோருக்கும் ஜெபிக்க நாங்கள் உத்தேசித்துள்ளோம். அதைச் செய்ய நாங்கள் விரும்புகிறோம். அது எங்களுடைய மாற்று ஏற்பாடு, அது என்னவென்றால், ஜெப அட்டை அளிக்கப்பட்டுள்ள ஒவ்வொருவருக்கும் ஜெபிக்க வேண்டும் என்பதே. வெளிப்படையாக கூறுவோமானால், அவர்களுக்கு ஒரு ஜெப அட்டையை அளிப்போமென்றால், அதற்காக நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், எல்லோரையுமே ஜெப வரிசைகளில் என்னால் கொண்டு வர முடியாது, அதை நீங்கள் காண்கிறீர்கள்; சில தரிசனங்களுக்கு பிறகு உடனே என் பலமானது குன்றிவிடுகிறது, எல்லா மக்களுக்கும் தரிசனத்தை என்னால் பார்க்க முடிவதில்லை. அது தாமே. என் கூட்டங்கள் ஒவ்வொருவரோடும் தனிப்பட்ட ஒரு தொடர்பு கொள்வதின் பேரில் அமைந்தவைகள் அல்ல; அது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை உயர்த்துவதின் பேரிலும், மற்றும் உயிர்த்தெழுதலின் பேரிலும் தான் அமைக்கப்பட்டுள்ளது, அதினாலே மக்கள் தாமே, வார்த்தை பிரசங்கிக்கப்படுதலை கேட்கையில், அவர்கள் தாம் கர்த்தராகிய இயேசுவின் பேரிலே விசுவாசம் கொள்ள ஏதுவாக இருக்கும். மேலும் அவர் தாமே, தம்முடைய உயிர்த்தெழுந்த வல்லமையிலே, நம்முடைய மத்தியில் வந்து, அவர் பூமியில் இருந்த போது செய்த அந்த அதே காரியங் களை செய்கின்றார், அவருடைய என்றென்றுமான சர்வவ ல்லமையின் உறுதிப்பாடாகவும், அவர் தாமே நம்மோடே இருக்கின்றார் என்றும், என்றென்றுமாக இருப்பார் என்பதில் உறுதிப்பாடாகவும் அதைச் செய்கின்றார். நாம் கிறிஸ்தவ விசுவாசிகளாக, கர்த்தர் இல்லாமல் இருக்க முடியாது. என்றென்றுமாக மற்றும் என்றென்றுமாக நாம் நித்தியத்திற்கென அவருடனே கூட இணைவானவர்களும், பங்குள்ளவர்களாகவும் இருக்கின்றோம் (அது அருமையான தல்லவா?), என்றென்றுமாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுடனே இணைவானவர்களாகவும், பங்குள்ளவர் களாகவும் இருப்பது: "சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்." எனக்கு அது பிடிக்கும், உங்களுக்கும் அல்லவா? அது அருமையானதாகும். ஆகவே இப்பொழுது, நாங்கள் - என் கூட்டமானது அந்த விதத்தில் தான் சார்ந்து அமைக்கப்பட்டுள்ளது, விசுவாசிகள் அதை பார்த்து பிழைக்கும் படியாக (look and live) அப்படியாக அமைக்கப்பட்டுள்ளது. 9. இப்போது, சகோதரர் ஆஸ்போர்ன் ... மிகச் சிறந்த மனிதர். அவர் இங்கே பீனிக்ஸில் இருந்தார் என்று நான் நினைக்கின்றேன், டாமி ஆஸ்போர்ன், நீங்கள் சந்தித்துள்ள சகோதரர்களில் சிறிய அருமையான சகோதரர்களில் இவரும் ஒருவராவார். மேலும் சகோதரன் ஓ. எல் - இல்லை, ஓரல் ராபர்ட்ஸ், அப்படிதான் என்று நினைக்கிறேன், மற்றும் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கின்ற மற்ற ஏனைய சுவிசேஷகர்கள்... ஓ, என்னே, அவர்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்கள் உங்களுடைய நகரத்துக்குள் வருகிறார்கள், அவர்கள் வித்தியாசப்பட்ட வகைகளில் ஊழியங்களைக் கொண்டுள்ளனர், அவர்களில் சிலர் கரங்களை வைக்கின்றார்கள் சிலர் எண்ணெய் பூசி ஜெபிக்கிறார்கள். அது ஒவ்வொன்றும் வேதப்பூர்வமானதாகும். அது சரியே. ஆம், ஐயா. அவர்கள் எல்லோருமே தேவனுடைய ஊழியக்காரர்கள் ஆவார்கள். அவர்களால் இயன்றவரைக்கும் சிறந்த முறையில் காரியத்தை செய்ய விழைகின்றனர். நான் அதை நம்புகிறேன். ஒவ்வொரு மனிதனைக் குறித்தும் அப்படித்தான் நான் நம்புகிறேன். எல்லா இடங்களிலும் மேலும் கீழுமாக வீதிகளில் பெரிய சபைகள் மற்றும் சிறிய மிஷன் சபைகள் மற்றும் எல்லாமே இருக்கின்றன. அந்த விதமான மக்களை, சிறிய மிஷன் சபைகள் ஆதாயப்படுத்த முடியாத சில மக்களை அந்த பெரிய சபைகள் ஆதாயப்படுத்தும். மற்றவற்றினால் ஆதாயப்படுத்திக் கொள்ள முடியாதவைகளை இந்த சிறிய மிஷன் சபை ஆதாயப்படுத்திக் கொள்ளும். நான் நினைக்க விரும்புவதென்னவென்றால் அவர்கள் ஒவ்வொருவரும் அருமையான மக்கள், அருமையான சகோதரர் என்பதே. கர்த்தருடைய ஊழியக்காரர்கள் என்ற விதத்தில் நாம் வேதாகம கலாசாலை ஆராய்ச்சிகளின் பேரில் சிறிது நாம் இணங்காமல் போகலாம், ஆனால் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக இருக்கின்ற தேவ அன்பிலிருந்து நம்மை ஏதுவுமே பிரிக்காது. நாமெல்லாரும் கர்த்தரை நேசிக்கிறோம். மேலும், அவர்கள் இங்கே கலங்கரை விளக்கங்கள் போல இருக்கின்றனர். ஒவ்வொரு, மக்கள் தங்கள் இடங்களில் வித்தியாசமான வழிகளில் இருக்கும் போது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை தேடி கண்டுணர ஏதுவாக இருக்கும். 10. இப்போது, இன்றிரவு, கூட்டத்தின் மேலாளரான சகோதரர் மூரும் நானும், ஒருக்கால் நான் இன்றிரவு வந்து கூடுமானவரைக்கும் நிறைய மக்கள் கூட்டத்தினரை வரிசையில் வைத்தால், ஒரு அருமையான நேரமாக இருக்கும் என்று பேசிக் கொண்டிருந்தோம், ஏனென்றால் மற்றவர்களை கடைசி இரவு கூட்டத்தன்று ஜெபிக்க விட்டுவிட எங்களுக்கு விருப்பம் இல்லை, அவர்களை அப்படியே ஜெபவரிசையில் அழைத்து ஜெபித்தல், பகுத்தறிதல் இல்லாமல் ஜெபம் மாத்திரம் செய்தல். எத்தனைப் பேர் காரியங்களை பகுத்தறிந்து கூறப்படுவதைக் கண்டிருக்கிறீர்கள்? உங்கள் கரங்களை நான் காணட்டும், கட்டடங்கள் முழுவதுமாக, இப்பொழுது எல்லோருமே அதைக் கண்டிருக்கிறீர்கள். ஓ, என்னே, நூறு சதவிகிதம் மக்கள் பார்த்துள்ளனர். அது சரி. இப்பொழுது, நான் வார்த்தையின் பேரில் சிறிது நான் பேச விரும்புகிறேன், அதன் பிறகு ஜெப அட்டைகள் வைத்திருக்கின்ற மக்களை நாம் அழைப்போமாக. என் மகன் சில நிமிடங்களுக்கு முன்னர் என்னிடம் ஒரு காகிதக் குறிப்பை அளித்தான், "என்னிடம் ஜெப அட்டை A, E இருந்தது, மற்றும் P, M அட்டை கொடுக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நானூறு ஜெப அட்டைகள் மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆதலால் நாங்கள் ஒவ்வொருவருக்காகவும் ஜெபிக்கப் போகின்றோம். ஆனால் அதை செய்ய வேண்டுமென்றால், ஒவ்வொருவருக்கும் பகுத்தறிதல் செய்து கூற இயலாது. ஆனால் சகோதரன் மூர், "சகோதரன் பிரன்ஹாம், கைகளை வைக்குதலைக் குறித்து போதிக்கப்பட்டுள்ள சில மக்கள் உள்ளனர்; அவ்விதமாக செய்யப்பட வேண்டும். அவ்வளவு தான்" என்று கூறுகின்றார். 11. ஆகவே என் வாழ்க்கையிலே நான் ஜெபித்த மிக நீண்ட ஜெப வரிசை எனக்கு நினைவில் வருகின்றது, அது அரிசோனாவிலுள்ள பீனிக்ஸில் நடந்தது, பத்து மணி நேரம் ஜெபித்தேன் என்று நினைக்கிறேன், அப்படித் தானே சகோதரனே? பத்து மணி நேரம், ஜெப வரிசையை தொடர்ந்து நடத்தி ஜெபித்தேன். ஓ, என்னே. நான் மிகவுமாக களைப்புற்றேன், இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு என்னால் நடக்க கூட முடியவில்லை. அதன் பிறகு சிவப்பு இந்தியரின் குடியிருப்பு பகுதியில், பிற்பகல் ஒரு மணிக்கு ஆரம்பித்து அடுத்த நாள் காலை சுமார் நான்கு மணி வரைக்குமாக நடந்தது என்று நான் நம்புகிறேன், அதன் பிறகு நாங்கள் புறப்பட்டு வந்தோம். முதலில் அவர்கள் என்னை ஒரு போலியான ஆள் என்று நினைத்தனர், ஆனால் அது கர்த்தர் தான் என்று அவர்கள் தத்ரூபமாக கண்ட போது, அவர்கள் உள்ளே வந்தனர். அங்கே நான் கூட்டம் நடத்தின இரவுகளை என்னால் மற க்க முடியாது. அவர்களில் சிலர் இடுப்பு பகுதி வரைக்குமாக ஈரத்துடன் இருந்தனர், ஏனென்றால் அவர்கள் அந்த நீரோடையில் உள் நீந்தி வந்திருந்தனர். அவர்கள் ஆற்றின் ஆழமில்லாத பகுதியான கடவுத்துறைக்கு செல்லவில்லை; அவர்கள் அப்படியே கடந்து வந்தனர், தங்களுக்கு அருமையானவர்களை ஜெபத்திற்காக ஆற்றைக் கடந்து கொண்டு வந்திருந்தனர். என் இருதயத்திற்கு அது ஒரு நினைவு சின்னமாகும்... தேவனுடைய வானத்திற்குரிய ஜீவராசிகளின் மகத்தான பரிமாணங்களில், நதிக்கு அப்பாலே, ஒரு நாளிலே நான் அவர்களை சந்திப்பேன் என்றும், தேவனுடைய துதி களை என்றென்றுமாக பாடிக் கொண்டிருக்க நான் எதிர்பார்க்கின்றேன். 12. இப்பொழுது, அவ்விதமான ஒரு கூட்டத்தை நடத்துவதானது எவ்வளவு பிரயோஜனமான ஒன்றாயிருக்கும் என்று எத்தனைப் பேர் நினைக்கிறீர்கள், வியாதியாயும் மற்றும் இன்னும் பிற காரியத்துடனும் இங்கிருக்கின்ற மக்கள், அவர்களை ஜெப வரிசையில் கொண்டு வந்து அவர்களுக்கு ஜெபிப்பதானது மிகவும் நல்லதாக இருக்குமல்லவா? உங்கள் கரங்களை நான் காணட்டும், மக்கள் கூட்டத்தின் உணர்வை நான் அறிந்து கொள்ளட்டும். உங்கள் கரங்களை இப்படியாக உயரே தூக்குங்கள் பார்க்கலாம், நீங்கள் விசுவாசிப்பீர்களானால்... உம், அது அருமையானதாகும். அது நல்லதாகும். சரி, அந்த விதமாகவே இன்றிரவு நாம் செய்யலாம், கர்த்தருக்கு சித்தமானால், பேசி விட்டு, பிறகு ஜெப வரிசையை அழைக்கலாம். நம்முடைய கர்த்தராகிய இயேசு என்ன செய்வாரென்று நமக்குத் தெரியாது. அவர் தாமே மிக அதிகமாக நமக்குள்ளே கிரியை செய்யலாம். 13. சில வாரங்களுக்கு முன்னர் என் கூடாரத்தில், எந்த ஒரு பகுத்தறியுதலும் மற்றும் எந்த ஒன்றும் இல்லாமல் வந்து கொண்டிருந்தேன், சுமார் நூற்று ஐம்பது மக்கள் ஜெப ஆராதனைக்காக வரிசையில் நின்று கொண்டிருந்தனர். நான் நான் அந்த மக்களை வரிசையில் கொண்டு வந்தேன், அவர்களோடு பேசினேன் அவர்களோடு ஜெபம் செய்தேன். அவர்கள் கட்டடத்தை விட்டு செல்வதற்கு முன்னர், அவர்கள் கட்டடத்திற்கு வெளியே செல்வதற்கு முன்னர், அவர்களுக்காக ஜெபம் ஏறெடுக்கப்பட்ட பிறகு, அவர்கள் மீது கைகள் வைக்கப்பட்ட பிறகு, சபையின் உதவியாளர்கள் (ushers) மற்றும் அவர்களும், சபையில் நடந்த பதினாறு மிகச் சிறந்த, பெரிய அற்புதங்களை குறித்து கூறினார்கள், அவர்களுக்காக ஜெபம் செய்ய ஆரம்பிக்கப்பட்ட நேரத்திலிருந்து, அவர்கள் வெளியேற கதவிற்கு அருகில் செல்வதற்கு முன்னரே நடந்த அற்புதங்களைக் குறித்து கூறினர், இளம் பிள்ளைவாதம், போலியோ வியாதியால் பீடிக்கப்படவர்கள் தாங்கள் நடக்க உபயோகித்த உபகரணங்களை, கக்கதண்டங்களை எடுத்து மூட்டை கட்டிக்கொண்டு நடந்து சென்றனர், மடக்க முடியாத கைகள் உடைய பெண்கள் தங்கள் கைகளை தங்கள் தலைகளுக்கு மேலே தூக்கி நிறுத்தி தேவனை துதித்தார்கள். நான், "ஓ, என்னே, ஒருக்கால் சகோதரன் ராபர்ட்ஸ் சரியாகதான் உள்ளார் போலும்......" என்று நினைத்தேன். ஆகவே.... ஆனால் சகோதரன் ராபர்ட்ஸ் தன்னுடைய வழியில் அதைச் செய்கின்றார், உங்களுக்கு தெரியும், நானோ கர்த்தர் அருளுகின்ற வழியிலே. 14. ஆகவே, இப்பொழுது, சிறிய பிரசங்கத்திற்காக... வார்த்தை எனக்கு பிடிக்கும் உங்களுக்கு பிடிக்குமல்லவா? ஓ, என்னே, நாம் வார்த்தையைக் கொண்டு தான் ஜீவிக்கின்றோம். இப்பொழுது, பரிசுத்த மத்தேயு, மத்தேயு சுவிசேஷம் 16ஆம் அதிகாரம், 15ஆம் வசனத்திலிருந்து ஆரம்பிப்போமாக, இங்கே பிரசங்கத்தின் பொருளுக்காக நாம் சில வசனங்களை வாசிப்போமாக. உங்களை நீண்ட நேரத்திற்கு நான் வைத்திருக்க மாட்டேன். இதற்கு பிறகு உடனடியாக ஆரம்பிப்போம், வியாதி யுள்ளோரையும், அவதியுள்ளோரையும் வரிசையில் நிற்க வைத்து அவர்களுக்காக ஜெபிக்க ஆரம்பிப்போம். நாங்கள் நம்புகிறோம்.... இப்பொழுது இதைச் செய்வதற்கு முன்னர், நீங்கள் இதைச் செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்: நீங்கள் வரிசையில் வரும் போது, உங்களால் கூடுமானவரைக்கும் முழு விசுவாசத்தையும் கொண்டு இந்த வரிசையில் வாருங்கள், தேவன் செய்யப்போகின்றார் என்றும், சுகமாக்கப்பட்ட நபராக இந்த கட்டடத்தை விட்டு வெளியே செல்லப் போகிறோம் என்றும் விசுவாசியுங்கள். "நீ விசுவாசிக்கக் கூடுமானால் ஆகும்" என்று கர்த்தர் கூறுகின்றார். 15. இயேசு தாமே சுகமளித்தார் என்று உங்களுக்கு தெரியுமா, ஒரு தரிசனத்தைக் கொண்டு சுகமளித்தார். அது சரியா? இவ்வளவு நாட்களாக உங்களுக்கு பிரசங்கிக்கப்பட்ட பிறகு அது உண்மை என்று எத்தனைப் பேருக்கு தெரியும்? அவர், "நான் எதையுமே தாமாக செய்வதில்லை, பிதாவானவர் செய்ய நான் காண்கிறதெதுவோ, அந்தபடியே நானும் செய்கிறேன்" என்று கூறினார். ஆனால் அங்கே சில குருடரான மனிதர் இருந்தனர், ஒரு சமயம் அவர்கள் தெருவில் வந்தனர், அவர்கள் அவரைப் பின் தொடர்ந்து சத்தமிட்டுக் கொண்டே வந்தனர். ஆனால் அவர் - அவர் அவர்களின் சத்ததிற்கு எந்த ஒரு கவனத்தையும் செலுத்தவில்லை. அவர் நேராக வீட்டுக்குள் சென்றார், அப்போது அந்த குருடான மனிதன் வீட்டுக்குள் நுழைந்து அவரிடமாக வந்தான், அவரை நோக்கி சத்த மிட்டுக் கொண்டிருந்தான். அவரும் அவர்களிடமாக திரும்பினார். ஆனால் அப்பொழுது அதைக் குறித்த எந்த ஒரு தரிசனமும் அவரிடம் இல்லாதிருந்தது. பாருங்கள் அவர் ஒரு தரிசனத்தை பார்த்திருப்பாரானால், அப்பொழுதே அவர் அதை நிறைவேற்றி செய்து முடித்திருப்பார். ஆனால் அவருக்கு ஒரு தரிசனமும் வரவில்லை. ஆதலால் அவர், "இதைச் செய்ய எங்களுக்கு வல்லமை உண்டென்று விசுவாசிக்கிறாயா? அவர்கள், "ஆம் ஆண்டவரே" என்றனர். அப்போழுது அவர்களுடைய கண்களை தம்முடைய விரல்களால் தொட்டு "உங்கள் விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது" என்று கூறினார். சில நிமிடங்களில் அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டன. அவருக்கும் அதற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. அதனோடு அவருக்கு ஒரு காரியமும் கிடையாது... கர்த்தராகிய இயேசு. அவர் "உங்கள் விசுவாசம்..." என்று தான் கூறினார். அது சரிதானே? நீங்கள் விசுவாசிக்கின்றபடியே உங்களுக்கு ஆகும். 16. அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தை தொட்ட அந்த ஸ்திரீ, அவர் அவள் மேல் தம்முடைய கைகளை கூட வைக்கவில்லை. அந்த காரியத்தைக்கூட அவர் செய்யவில்லை. பாருங்கள்? அந்த ரோம் நூற்றுக்கு அதிபதி, அவன், "நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல. நீர் ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும் அது அப்படி ஆகும்" என்று கூறினான். அங்கு தான் விசுவாசமானது இருக்கின்றது. பாருங்கள்? ஆனால் யவீரு, ஒரு யூதனாக இருந்ததால், அவனுக்கு கைகளை வைக்குதலும் இன்னும் மற்றவையும் அவனுக்கு போதிக்கப்பட்டிருந்தது, ஆகவே அவன் வந்து, "நீர் வந்து என் சிறு குமாரத்தி மீது உமது கைகளை வையும். அவள் மரித்துக் கொண்டிருக்கின்றாள், நீர் வந்து அவள் மேல் உமது கைகளைவையும், அப்பொழுது பிழைப்பாள்" என்று கூறினான். ஆனால் மரித்துக் கொண்டிருந்த புறஜாதி பையனைக் குறித்தோ, அவன், "வார்த்தையை மாத்திரம் சொல்லும் வார்த்தை அது அப்படியே ஆகும்" என்று கூறினான். பாருங்கள்? நீங்கள் விசுவாசிக்கின்றபடியே ஆகும். புரிகின்றதா? 17.இப்பொழுது, நீங்கள் தாமே நோக்கிப் பார்த்துப் பிழைப்பீர்கள், வார்த்தையின் அடிப்படையிலே பிரசங்கிக்கப் படுகின்ற சுவிசேஷமானது பிரசங்கிக்கப்படுவதைக் நோக் கிக் கேட்கும்போது, அது காரியத்தை முற்றுப்பெறச் செய்கின்றது. சரியாக அந்த இடத்திலேயே நீங்கள் குணமாகிறீர்கள். ஆனால் மனம் சார்ந்த, மனதால் இயக்கப்படுகின்ற விசுவாசத்தினாலே உங்களால் சுகத்தை பெற்றுக் கொள்ளவே முடியாது. நீங்கள் தாமே உங்கள் இருதயத்திலிருந்து வருகின்ற உண்மையான ஜீவனுள்ள விசுவாசத்தைக் கொண்டு மாத்திரம் தான் குணமாக்கப்பட வேண்டும். ஆகவே... இங்கே நீங்கள் எவ்வளவாக உணர்ச்சி அடைந்து உணர்ச்சி பூர்வமாக இருந்தாலும் சரி, இங்கே எவ்வளவாக அவிசுவாசப்பட்டாலும் சரி, ஆனால் இங்கே உள்ளிலே இருக்கும் ஏதோ ஒன்றானது, அது முடிந்து விட்டது என்று கூறுமானால், அது முடிவு பெற்றுவிட்டது; அவ்வளவு தான். அது காரியத்தை முற்றுப்பெறச் செய்கிறது. இனி மேல் எந்த ஒரு பயமும் இல்லை. வேறு யாராலும் உங்களுக்கு வேறே வித்தியாசமான ஒன்றைக் கூற முடியாது. ஏன் அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்கள் என்று உங்களுக்கு தெரியாது. அது மனதைக் கொண்டு யோசித்துப் பார்க்கும் ஒன்றல்ல; அது விசுவாசம் ஆகும். நீங்கள் அதை விசுவாசிக்க மாத்திரம் செய்யுங்கள், அவ்வளவு தான்; அந்த விதமாகத் தான் அது நடந்தேறும். நீங்கள் அதை விசுவாசியுங்கள், தொடந்து முன் சென்று கொண்டே இருங்கள், உங்கள் உணர்வு பூர்வமான அறிவுக்கூர்மை என்ன கூறினாலும் அது ஒரு பொருட்டே அல்ல, மனதைக் கொண்டு யோசித்த லிலிருந்து அப்புறம் இருங்கள். ஆபிகாமும் சாராளும் அந்த குழந்தையை பெறப் போகிறோம் என்ற காரியமானது மனதாலே சிந்தித்துப் பார்க்கக் கூட முடியாத ஒன்றாகும், ஆனால் எப்படியாயினும் அதை அவர்கள் விசுவாசித்தார்கள். ஒரு பெரிய மீனின் வயிற்றில் ஒரு மனிதனால் உயிருடன் இருப்பது என்பது மனதின் யோசனைக்கு அப்பாற்பட்ட ஒன்றாகும், ஆனால் எப்படி இருந்தாலும் அவர் அதைச் செய்தார். புரிகின்றதா? ஆம், அது உண்மை ஆகும். அது மூளையைக் கொண்டு யோசித்தல் என்பதல்ல, அது விசுவாசமாகும். 18. இப்பொழுது, தேவனுக்கு சித்தமானால், வார்த்தையின் பேரில் சில நிமிடங்களுக்கு நான் பேசுவேனாக. இப்பொ ழுது, பரிசுத்த மத்தேயு 16ஆம் அதிகாரத்திற்கு திருப்பியுள்ள நீங்கள், 15 வசனத்தைப் பார்க்கவும். அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான். இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின் மேல் என் சபையை கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை. இந்த வார்த்தையின் ஆக்கியோனிடம் நாம் பேசுகையில் நம்முடைய தலைகளை நாம் தாழ்த்துவோமாக. பரலோகப் பிதாவே, இந்த வார்த்தையிலிருந்து நாங்கள் வாசித்த பிறகு, அது தாமே தேவனுடைய குமாரனுடைய பரிசுத்த உதடுகளிலிருந்து இது வந்த ஒன்று என்றும், தாமே பேசின போது, மத்தேயு எழுத்தாளனாக அதை எழுதிக் கொண்டிருந்தான் என்பதை நாங்கள் அறிந்தவர்களாக... ஆகவே நாங்கள் பயபக்தியுடனே உம்மிடமாக நாங்கள் வருகிறோம், இன்றிரவு இந்த வேத வசனத்தின் பேரிலே நீர் தாமே மேலும் விவரங்களை எங்களுக்கு காண்பிக்கும் படியாக கேட்க பயத்துடன் அணுகுகிறோம், ஏனென்றால் நாங்கள் அதை ஒரு பொருளாக எடுத்துள்ளோம், முதலாவதாக எங்கே அணுகுதல் என்று அறியா தவர்களாக உள்ளோம். ஆகவே இந்த பெரிய அரங்கத்தில் நிற்க மாத்திரம் செய்து, இந்த வேத வசனங்களை உணர்கிறோம். இதோ அது வருகின்றது. இப்பொழுது பிதாவே, பரிசுத்த ஆவியானவர் தாமே வார்த்தையை எடுத்து ஒவ்வொரு இருதயத்திற்கு தேவைப்படுகிறபடியால் அதை ஒவ்வொரு இருதயத்துக்கு கொடுக்கட்டும். கர்த்தாவே, இருதயங்களில் விசுவாசத்தை கட்டி அமைத்தருளும். உம்மை விசுவாசிக்கவும் மற்றும் உம்மை ஏற் றுக்கொள்ளவும் இன்னுமாக விசுவாசம் இல்லாதவர்கள், இன்றிரவு தாமே அதைக் கொள்வார்களாக, மேலும் அவர்கள் தாமே இரட்சிக்கப்படட்டும்... தேவனிடமிருந்து புறம்பாக இருக்கின்ற எல்லா புறம்பே இருப்பவர்கள் தாமே இன்றிரவு தாழ்மையுடன் சிலுவையண்டை வந்து இரட்சிக்கப் படுவார்களாக. பரிசுத்தஆவி இல்லாதவர்கள் தாமே இன்றிரவில் பரிசுத்த ஆவியுடனே கூட மறுபடியும் பிறக்கட்டும். ஆராதனையிலிருந்து மகிமையை எடுத்துக் கொள்ளும், இதை நாங்கள் பரிசுத்த ஆவியின் கிரியைக்காக உம்மிடமாக எங்களை சமர்ப்பிக்கின்றோம், இயேசுவின் நாமத்தில், ஆமென். 19. நாம் இன்று குறிப்பிட்டு பேசவிருக்கின்ற வேத வசனங் களாவன... இப்பொழுது தரிசனங்கள் வர ஆரம்பிக்கவில்லை என்றால் சரியாக இப்பொழுதே ஒரு போராட்டமாக எனக்கு இருக்கும் என்று என்னால் காண முடிகின்றது. எனக்காக நீங்கள் ஜெபம் செய்யுங்கள், ஏனென்றால் நான் ஏற்கெனவே இப்பொழுது ஒரு தரிசனத்தை பார்த்துக் கொண்டிருக்கிறேன், அது இப்போது வந்து கொண்டிருக்கின்றது. இப்பொழுது கர்த்தராகிய இயேசு, தேவனுடைய குமாரன்... அந்த குழந்தை உங்களுக்கு வேண்டும் என்று விரும்புகிறீர்களா? நீங்கள் குழந்தை வேண்டும் என்று ஜெபித்துக் கொண்டிருக்கிறீர்களே, தேவன் குழந்தையை உங்களுக்கு தருவார் என்று விசுவாசிக்கிறீர்களா? உங்களால் கர்ப்பம் தரிக்க இயலாது, அப்படி தானே? உங்களால் ஒரு குழந்தையை பெற முடியாது, ஆனால் தேவன் உங்களுக்கு ஒன் றைத் தருவார் என்று ஜெபித்துக் கொண்டிருக்கிறீர்கள் அல்லவா. அது சரியா, அங்கே உட்கார்ந்திருக்கின்ற பெண்ணே அது சரியா? உங்களிடம் ஜெப அட்டை உள்ளதா? உங்களிடம் ஜெப அட்டை இல்லை. உங்களுக்கு ஜெப அட்டை தேவையில்லை. இயேசு உங்களுக்கு ஒரு குழந்தையை கொடுப்பார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அப்படி யானால் நீங்கள் ஒரு குழந்தையை பெற்றுக் கொள்ளப் போகிறீர்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நாமெல்லாரும் அவரை நம்முடைய முழு இருதயத்துடனே நேசிப்போமாக. அவர் தவறினதை நான் கண்டதேயில்லை, நீங்க ளும் அவ்வாறே காண மாட்டீர்கள். நசரேயனாகிய இயேசு, இங்கே பேசுகின்றார்..... அந்த சிறிய பெண், நாம் செய்திக்குள்ளாக செல்லும் முன்னர், அங்கே உட்கார்ந்திருக்கின்ற அந்த சிறு பெண், அவளுடைய விசுவாசமானது எப்படியோ என்னை அங்கே இழுத்தது. அது தேவனுடைய கிருபை என்று யூகிக்கின்றேன். அந்த ஒளியானது அவளுக்கு மேலாக நின்றது, தரிசனத்தை திறந்து காண்பித்தது, அவள் ஒரு குழந்தைக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறாள் என்று காண்பித்தது. சரி. 20. நசரேயனாகிய இயேசு, தேவனுடைய குமாரன் இங்கே கட்டிடத்தில் இருக்கின்றார், நீங்கள் பார்க்கின்றீர்கள். அவர் இங்கே இருக்கின்றார். யாரோ ஒருவனை நோக்கிப் பார்த் துக் கொண்டேயிருந்து அதே சமயத்தில் இந்த இதே சுவிசேஷத்தை பவுல் பிரசங்கித்தான் என்று நினைக்கிறீர்களா? அவன், "நீ.....என்று காண்கிறேன்" என்று கூறினான். அது பரிசுத்தவான்களுக்கு ஒரு விசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசம். இப்பொழுது, இயேசு பேதுரு, யாக்கோபு மற்றும் யோ வானிடம் பேசிக்கொண்டிருந்தார். கர்த்தருடைய வருகையை காண்பிக்க மலையின் மீது அவர்கள் சென்றனர். அவர், "இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காணும் முன் மரணத்தை ருசிபார்ப்பதில்லை" என்று கூறினார். அவர் மேலே ஏறி மலையில் என்ன சம்பவிக்கப் போகிறது என்று காண்பித்தார். அவர்கள் பார்த்தபோது, அவர்கள் முதலாவதாக கண்ட காட்சி, இயேசு மகிமைப்படுத்தப்பட்டதைக் கண்டார்கள். 21. அடுத்ததாக மோசேயும் எலியாவும் அவருக்கு அருகில் காணப்பட்டதை அவர்கள் கண்டார்கள். சபை எடுக்கப்பட்ட பின்னர் மீதியான யூதர்களுக்கு பிரசங்கிக்கப் போகிறவர்கள் அவர்கள் தான். அடுத்ததாக அவர்கள் கண்ட காரியம் என்னவென்றால் இயேசுவை மாத்திரமே அவர்கள் கண்டார்கள் அவர் தாமே மறுபடியுமாக வந்து, ஆயிர வருட அரசாட்சி முழுவதும் நம்முடனே அரசாட்சி செய்ய அவர் மறுபடியுமாக வருகின்றார். என்ன ஒரு அருமையான காட்சி, கீழே இறங்கி வந்து... அவர், "மனுஷ குமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள்" என்ற கேள்வியை கேட்டார். ஒருவன், "நீர் எலியா" என்கின்றான். வேறொருவன், "என்ன இது, நீர் மோசே" என்கின்றான். வேறு சிலர், "நீர் எரேமியா, அந்த - தீர்க்கதரிசிகளில் ஒருவர்" என்றார்கள். அப்போது அவர், "நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள்" என்று கேட்டார். அப்பொழுது அப்போஸ்தலனாகிய பேதுரு, அவன் வெறுமனே ஒரு மீனவன் தான், படிப்பறியாதவனும் பேதையனும், தன்னுடைய சொந்த பெயரை கையெழுத்திடவும் கூட அவனுக்கு தெரியாது என்று நமக்கு போதிக்கப்பட்டுள்ளது. அவன் படிப்பறியாதவனும் பேதையன் என்றும் வேதாகமம் கூறுகின்றது. அதைக் குறித்து நீங்கள் சற்று சிந்தித்துப்பார்பீர்களா? பேதையனும், படிப்பறியாத மனிதன், "நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து" என்று கூறினான். இயேசு, உடனடியாக திரும்பி, "யோனாவின் குமார னாகிய சீமோனே, நீ பாக்கியவான், மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை" என்று கூறினார். வேறு விதமாகக் கூறுவோமானால், "சீமோனே, எந்த ஒரு வேதாகம கல்லூரியிலும் இதை நீ கற்றுக் கொள்ள வில்லை. மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை. நீ அதைக் குறித்த எந்த ஒரு நபரின் கருத்தையும் எடுத்துக் கொள்ளவில்லை, ஆனால் பரலோகத்திலிரு க்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை." 22. இப்பொழுது, இங்கிருக்கின்ற வேதாகம கல்லூரி பயின்ற நிபுணர்கள் அநேகமாக உள்ளனர், அவர்களும் மற்றும் இங்குள்ள சகோதரரே, இதனுடன் நீங்கள் ஒத்துப்போகாமல் இருக்கலாம். இந்த கடிகாரத்தில், ஜெப வரிசையை ஆரம்பிக்கும் நேரம் வரும் முன்னர், இந்த சிறிய பிரசங்கத்திற்கான ஒரு சிறிய வேதவசனம் இருக்கிறது. நாம் துரிதமாக முடிக்க வேண்டும், ஏனென்றால் ஜெபிக்கப்பட நிறைய பேர் உள்ளனர். நீங்கள் ஒத்துப் போகாவிட்டாலும், நாம் இன்னுமாக சகோதரர்களாக இருக்கின்றோம். நான் அதைக் குறித்த என் எண்ணத்தை விவரித்துக் கொண்டிருக்கின்றேன், அவ்வளவுதான். நிறைய பேர் கூறுவதானது..... கத்தோலிக்க சபை விசுவாசிப்பது என்னவென்றால், பேதுரு தான் அல்லது அந்த கல் அவர்கள் ...வர்கள் அந்த கல்லின் மீது தான் சபையைக் கட்டினார்கள் என்று விசுவாசிக்கிறார்கள். அவர்களில் சிலர் பேதுருவின் மீது தான் கட்டப்பட்டுள்ளது என்கின்றார்கள், பேதுரு தான் அந்த சிறிய கல், அதன் மீது தான் அவர்கள் சபையை கட்டினார்கள் என்று கூறுகிறார்கள். சிலர் கூறுவது என்னவென்றால், கிறிஸ்து அங்கே தம்மைக் குறித்து தான் பேசுகிறார் என்றும், அதன் மீது தாங்கள் சபையை கட்டியுள்ளதாகவும் கூறுகிறார்கள். இப்பொழுது, நட்புணர்வுடனே, அந்த இரண்டு கருத்துக்களுடனும் நான் ஒத்துப்போவதில்லை. அவர் என்ன கூறினார் என்றால், தேவனிடமிருந்து அனுப்பப்பட்டுள்ள ஆவிக்குரிய வெளிப்பாட்டின் மேல் தான் தம்முடைய சபையை அவர் கட்டுவதாக கூறினார் என்றே நான் நினைக்கிறேன். புரிகின்றதா? ஏனென்றால் அவர், "மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை" என்று கூறினார். ஆகவே அது தாமே ஆவிக்குரிய விதத்தில் வெளிப்படுத்தப்படுகின்ற தேவனுடைய சத்தியம் ஆகும், "நான் என் சபையைக் கட்டுவேன், பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை" என்பதே ஆகும். 23. இப்பொழுது, நாம் பின் சென்று ஆதியிலே, துவக்கத்திலே நாம் பார்ப்போமாக, ஏதேன் தோட்டத்திலே, அவர்கள் ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியே எடுக்கப்பட்ட பின்னர் அதன் பிறகு பிள்ளைகள் பிறந்தனர். காயீன் மற்றும் ஆபேல், அந்த இரண்டு பையன்களும், தாங்கள் மரிக்கப் போகும் மானிடர்கள் என்றும், அவர்கள் மரித்துக் கொண்டிருக்கின்றனர், ஒரு மெழுகுவத்தியைப் போல எரிந்து உருகிக் கொண்டிருக்கின்றனர் என்றும், ஒரு நாளிலே தாங்கள் மண்ணுக்கு திரும்புவோம் என்றும், அவர்களை இந்த பூமிக்கு கொண்டு வந்த, தங்களை உண்டாக்கினவரிடத்திற்கு திரும்பப் போகிறோம் என்றும் அவர்கள் உணர்ந்தனர். ஆகவே தேவனிடத்தில் தங்களுக்கு தயவு கிடைக்க வேண்டுமென்று அவர்கள் விரும்பினர். ஆகவே இருவரும் ஆராதிக்க சேர்ந்து வந்தனர். இங்கே ஒரு சிறு கருத்தை நாங்கள் வைக்க இருக்கின்றோம், அதினாலே நீங்கள் உண்மையாகவே புரிந்து கொள்ள ஏதுவாயிருக்கும்... இப்பொழுது, ஒவ்வொரு நப ரும் எங்காவது ஓரிடத்தில் ஒரு சபையைச் சேர்ந்தவர்களாக இருப்பீர்கள் என நான் நம்புகிறேன். அது உங்கள் கடமை ஆகும்; நீங்கள் சபையை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். ஆனாலும் வெறுமனே சபையைச் சேர்ந்திருத்தல் எந்த காரியத்திற்கும் பிரயோஜனம் அல்ல. பாருங்கள்? ஒவ் வொருவரும் ஆராதிக்க வேண்டும் என்று நான் நினைக்கின்றேன், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஆவியின் ஒருமையுடனும், சுத்த இருதயத்துடனும் ஆராதிக்க வேண்டியவர்களாக இருக்கின்றீர்கள், ஆனால் அது மாத்திரமே போதாது. ஒவ்வொரு மனிதனும் தேவனிடத்தில் விசுவா சம் கொண்டிருக்க வேண்டும், தேவனில் எல்லாவற்றைக் காட்டிலும் அதிகமான விதத்தில் விசுவாசம் வைத்திருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். ஆனாலும், அது இன்னுமாக அல்ல. பாருங்கள்? சபைக்கு செல்லுதல், சபையைச் சேர்ந்திருத்தல், தசமபாகங்களை செலுத்துதல், தேவனை ஆராதித்தல் மற்றும், மதப்பூர்வமான ஒன்று என்று அழைக்கப்படுகின்ற நாம் செய்கின்ற இந்த எல்லா காரியங்களையும் செய்தல் என்பதை பார்க்கும் போது, தேவன் காயீனை ஆக்கினைக்குள்ளாக தீர்ப்பதென்பது அநீதியான ஒன்றாக இருக்கும், ஏனென்றால் அவன் அந்த எல்லாவற்றையுமே அவன் செய்தான். 24. காயீன் தேவன் இல்லை என்று சொல்லுகின்ற நபராக இருக்க வில்லை. காயீன் ஒரு விசுவாசி ஆவான். "இதோ, தேவன் என்கின்ற ஒன்று இருக்கின்றது என நான் விசுவாசிப்பதில்லை" என்று கூறிக் கொண்டு காயீன் வரவில்லை. காயீன் - காயீன் ஒரு விசுவாசியாக வந்தான். அவன் தேவ னிடத்தில் தயவு பெற முயற்சித்துக் கொண்டிருந்தான். ஆகவே காயீன் ஒரு பலிப்பீடத்தைக் கட்டினான். ஒரு பலி ப்பீடம் என்பது ஒரு சபை ஆகும், ஆராதிக்கும் ஸ்தலம் ஆகும். காயீன் ஒரு பலிப்பீடத்தை கட்டினான், அது மாத்திரம் அல்ல, காயீன் காணிக்கையும் கொண்டு வந்தான், ஒரு பலியையும் உண்டாக்கினான். அது மாத்திரம் அல்ல, காயீன் கர்த்தரை தொழுது கொண்டான். உங்களால் அதை க்காண முடிகின்றதா? இப்பொழுது, நீங்கள் ஒரு சபையை சேர்ந்தவராக இரு ந்து, பீடத்திற்கு சென்று ஜெபம் செய்து, உங்கள் கடமைகளை செய்து, தசமபாகங்களை சபைக்கு செலுத்தி, ஆவிக்குரிய பலியை செய்து, உங்கள் முழங்கால்களில் நின்று, தேவனில் நீங்கள் கொண்டுள்ள விசுவாசத்தை அறிக்கையிட்டு ஆனாலும் இழக்கப்பட்ட வர்களாகவே இருக்கலாம். நாம் துவக்கத்திற்கு திரும்பிச் செல்வோம். நாம் முதலாவதாக சரியான பாதைக்குச் செல்வோம் (புரிகின்றதா?); பிறகு உங்களால் சரியாக ஓட ஏதுவாகும், நீங்கள் சரியான சாலைக்கு செல்வீர்களானால் அப்படியாகும். இப்பொழுது, அங்கே இரண்டு பேர் இருந்தனர்.... ஒருக்கால் ஞாயிறுக்கிழமை, ஞாயிறு பிற்பகல் நாம் கர்த்தருக்கு சித்தமானால், உண்மையான மற்றும் போலியான கொடிகளைக் குறித்து இன்னும் சற்று ஆழமாக நாம் பார்க்கலாம். கவனியுங்கள், ஆனால் இப்பொழுது, ஆபேல்... ஒரு மனிதன் தொழுதுகொள்ளும் போது வித்தியாசத்தை கொண்டுவருவது எது, ஒரு மனிதன் ஒரு பலியை கொண்டு வருகையில், இந்த எல்லா காரியங்களையும் ஒரு மனிதன் செய்யும் போது, ஏன் தேவன் அவனுடைய காரியங்களை ஏற்றுக் கொள்வதில்லை? 25. இப்பொழுது, காயீன், வேண்டுமென்றே சென்று அங்கே நடந்து சென்று, நிலத்தின் கனிகளையும், அவனுடைய கைகளின் பிரயாசத்தையும் எடுத்து இங்கே கொண்டு வந்திருப்பான் என்று நான் விசுவாசிக்கவில்லை, உஷாராக இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் அவன் செயல்பட்டி ருக்க மாட்டான். நான் நம்புவது என்னவென்றால் காயீன், தான் சரியானதை செய்து கொண்டிருக்கிறோம் என்று நினைத்து முழு இருதயத்துடனே செயல்பட்டான். அப்படியானால் ஏன் அவன் தேவனிடம் தயவு பெற வேண்டும் என்று முயற்சித்துக் கொண்டிருந்தான்? அவன் ஜீவனை மறுபடியுமாக கண்டெடுக்க முயன்று கொண்டிருந்தான். கேருபீன்கள் இருந்த ஏதேன் தோட்டத்திற்கு மறுபடியுமாக திரும்பிச்செல்ல அவன் முயற்சி செய்து கொண்டிருந்தான். ஜீவ விருட்சத்தை காவல் காத்துக்கொண்டிருந்த கேருபீன்கள் இருந்த கிழக்கு பக்கத்திற்கு அவர்கள் சென்றனர் என்று நான் கற்பனை செய்து பார்க்கின்றேன். அவர்கள் மறுபடியும் வருவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தனர். ஆகவே ஒரு மனிதன் தன்னுடைய முடிவில் அவனுடைய ஆத்துமா எங்கு செல்லும் என்ற காரியமானது நிச்சயமற்ற, நிலையில் இருக்கையில், அவன் கடமைக்கென்று சபைக்கு செல்லுதல் என்பதை அவன் செய்யவே கூடாது; அவன் அங்கே தொழுது கொள்ளவே செல்கிறான். ஆகவே காயீன் தன்னுடைய முழு இருதயத்துடனே, "தேவன் ஒருவர் இருக்கின்றார் என்று நான் விசுவாசிக்கிறேன். நான் அவரின் கண்களில் தயவு பெறவே நான் வந்து கொண்டிருக்கிறேன்" என்று கூறினான். இதோ அவன் செல்கிறான், தான் பயிரிட்டு வளர்த்த நிலத்தின் கனிகளை எடுத்து வருகின்றான், அங்கே அவன் வைக்கின்றான், ஒருக்கால் அந்த பெரிய காலா லீலி புஷ்பங்களையும் மற்றும் அழகான மலர்களையும் வைக்கின்றான், அதை சுற்றிலும் வைக்கின்றான் பிறகு பின் நகர்ந்து... ஓ, அந்த விதமான ஒரு சுபாவத்தை பற்றி நாம் சிலவற்றை கூறலாம். ஆகவே அவைகளை வைத்து விட்டு பின் நகர்ந்து முழங்கால்படியி டுகிறான், தன் கரங்களை மேலே உயர்த்தி தன்னுடைய தவறுகளையெல்லாம் அறிக்கையிட்டு யெகோவாவை தொழுது கொண்டான். ஆனால் யேகோவாவோ, வேண்டாம் (no) என்று தலை அசைத்தார். 26. இங்கே ஆபேல் வருகின்றான், அழகான ஒன்றுமே இல்லாமல் வந்தான், ஒரு சிறிய ஆட்டுக்குட்டியை திராட்சைக் கொடியியைக் கொண்டு அதன் கழுத்தை கட்டி அந்த சிறு ஆட்டை தர தரவென்று இழுத்துக் கொண்டு வந்தான், அதனை இழுத்தான், அதனை தூக்கினான், அந்த கல்லின் மீது அதனை போட்டான். அவர்களிடம் கத்திகள் இல்லாதிருந்தது, ஆகவே அவன் ஒருக்கால் ஒரு கூர்மையான கல்லை அல்லது அதைப் போன்ற ஒன்றை எடுத்தான், அதனுடைய சிறிய தலை இழுத்தான் அந்த சிறு தொண்டையை வெட்டி னான், அந்த இருதயத்திலிருந்து தலைக்கு செல்லும் நரம்பை அறுக்கும் வரைக்குமாக வெட்டினான், அப்போது அந்த சிறு ஆடானது கால்களை உதைத்துக் கொண்டிருந்தது, இரத்தம் பீறிட்டு தெறித்துக் கொண்டிருந்தது, அந்த சிறு ஆட்டின் உயிர் போகும் வரைக்குமாக அதை தன் கரங்களை வைத்து தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்தான். அப்பொழுது தேவன் கீழே நோக்கிப் பார்த்தார், "அது சரியா னது. அது சரியான ஒன்று" என்று கூறினார். 27. இப்பொழுது, அந்த பையன் அதைச் செய்வதற்கு அந்த ஒரு வழி தான் இருந்தது, அது தான் சரியான பலி என்று அறிந்து கொள்ள, அது தேவனிடமிருந்து வந்த ஆவிக்குரிய வெளிப்பாடாக இருக்க வேண்டும். அது முற்றிலுமாக.... அதிலிருந்து ஒவ்வொன்றும் ஆவிக்குரிய விதமாக வெளிப் படுத்தப்பட்ட சத்தியம் என்பதாக உள்ளது. எப்படியாக தேவன், தம்முடைய இரக்கத்தினாலே, பரிசுத்த ஆவியின் செயல்பாட்டினாலே, வார்த்தையாகிய, ஆவிக்குரிய சத்தியத்தை வெளிப் படுத்துகின்றார். நீங்கள் அதை ஒரு கல்வி நிபுணத்துவம் சார்ந்த ஒரு விதத்திலே படிக்க முயற்சிப்பீர்களானால், நீங்கள் கணிதப் பிரகாரமாக ஒன்றை புரிந்து கொள்ள வாசிக்க முயற்சிப்பது போன்றதாகும். ஆனால் நீங்கள் கிறிஸ்துவை உங்கள் சொந்த இருதயத்தில் ஏற்றுக் கொண்ட பிறகு நீங்கள் அதைப் படித்தால் அப்போது அது மறுபடியுமாக ஒரு புத்தம் புதிய புத்தகமாக உங்களுக்கு அது இருக்கும். அது ஒரு அன்பின் சம்பவம் ஆகும். தேவன் அதை உங்களுக்கு அளிக்க எழுதுவதாகும். அது ஆவிக்குரிய விதத்தில் வெளிப்படுத்தப் படுகின்றது. தேவனுடைய சபையானது முற்றிலுமாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஆவிக்குரிய வெளிப்பாடாக இருக்கும். எந்த ஒரு மனிதனாலும் தன் சொந்த விருப்பத்தைக் கொண்டு அதை பெற்றுக்கொள்ள முடியாது. இயேசு, "என் பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் என்னிடத்தில் வர மாட்டான்" என்று கூறினார். அது சரியா? ஒரு நபரை இழுப்பதென்பது துவக்கதிலேயே பரிசுத்த ஆவியா னவரின் கிரியையாக இருக்க வேண்டும். ஆகவே பரிசுத்த ஆவியானவரின் இழுத்தலினாலே அந்த நபர் தேவனிடம் வரும் போது, "அவனை நான் புறம்பே தள்ளுவதில்லை. அவனுக்கு நித்திய ஜீவனை அளித்து கடைசி நாளில் அவனை உயிரோடெழுப்புவேன்" என்று இயேசு கூறினார். அது சபைக்கு என்ன அழகான ஒரு நம்பிக்கையை அது அளிக்கிறது. 28. ஆகவே இப்பொழுது, நண்பர்களே, அதைத் தான் எளி மையான விதத்தில் உங்களிடமாக நான் கொண்டுவர முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். நான் ஒரு போதகன் (teacher) அல்ல. நான் கல்வியறிவு இல்லாத ஒருவன். ஆனால் அடிப்படையான சத்தியம் என்ன என்று அறிந்தவனாக அதை நான் செய்து கொண்டிருக்கின்றேன், என்னுடைய காரியத்தில் அது கிரியை செய்தது என்று நான் அறிந்திருக்கிறேன். இன்னும் இலட்சக்கணக்கானவர்களின் காரியங்களில் அது கிரியை செய்திருக்கிறது. உங்கள் காரியத்திலும் அது கிரியை செய்யும். நீங்கள் தாமே எல்லாவற்றையும் உங்களிடமிருந்து அகற்றிப் போட்டு சரியாக வார்த்தைக்கு வருவீர்களானால், அப்போது உங்கள் ஸ்திரமான, அசையாத, எப்போதும் கர்த்தருடைய கிரியைகளில் நிலைத்திருக்கின்ற ஒன்றை உங்களால் கட்டி எழுப்ப முடியும், இங்குமங்குமாக அசைந்து அலைந்து கொண்டிராமல், ஒவ்வொரு ஜெபவசைக்கும் சென்று முயற்சி செய்து கொண்டு, தெருக்களில் மேலும் கீழுமாக ஓடிக்கொண்டு, இந்த ஒன்றுக்கு, அந்த ஒன்றுக்கு சென்று கொண்டிருத்தல் இருக்காது..... நீங்கள் நிலையாக இருப்பீர்கள். "கர்த்தாவே, நீர் அதைச் சொன்னீர் ஆதலால் அதை நான் விசுவாசிக்கிறேன், அத்து டன் காரியம் முற்றுப்பெற்றது." உங்களை வேதனைப் படுத்துகின்ற எல்லா பிசாசுகளாலும் உங்களை அதிலிருந்து குலுக்கி எடுத்துப் போடவே முடியாது. நீங்கள் அதை அறிவீர்கள். இயேசுகிறிஸ்து கல்வாரியில் மரித்தார் என்ற காரியத்தை தேவன் ஒரு முறை உங்களுக்கு வெளிப்படுத்தி, ஆவிக்குரிய விதத்தில் உங்கள் இருதயத்தில் அதை வைத்திருக் கிறாரென்றால், நீங்கள் சுகமாக்கப்பட்டுள்ளீர்கள். ஆமென். இனிமேல் நீங்கள் எந்த ஒரு ஜெப வரிசைக்கும் வரவேண்டிய அவசியமே இல்லை. நீங்கள் குணமாக்கப்பட்டு நலமாக இருக்கிறீர்கள். 29. ஒவ்வொரு தடவையும், பரிசுத்த ஆவியின் கிரியையினாலே, இயேசு உங்களுக்கு பதிலாக அந்த இடத்தில் அவர் மரித்தார் என்றும் உங்கள் இருதயக் கதவை தட்டிக் கொண்டிருப்பது அவரே என்றும் தேவன் உங்களுக்கு வெளிப்படுத்துவாரானால், அப்பொழுது அந்த சிறு இருதயத்தில் ஏதோ ஒன்று சம்பவிக்கின்றது, அப்போது எல்லாமே நலமே. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? நாம் பீட அழைப்பு கொடுக்கும் வழக்கத்தை கொண்டிருக்கின்றோம், மக்களை பீடத்தண்டை சுற்றி வரும் படிக்கு அப்படியாகச் செய்கிறோம், ஆனால் வேதாகம காலத்திலே, "கர்த்தருடைய நாமத்தின் மேல் விசுவாசமுள்ள வர்களாய்..." அவரை ஏற்றுக் கொண்டவர்கள், அவர் எங்கே இருந்தாலும் சரி. "விசுவாசித்தவர்கள் அநேகர் இரட்சிக்கப்பட் டார்கள்." அவர்களிடம் பீட அழைப்புகள் கொடுக்கப்படுகின்ற காரியமாது இல்லாதிருந்தது. பீட அழைப்பு முதன் முதலாக மெதொடிஸ்ட்டில் ஆரம்பித்தது, ஆதி மெத்தொடிஸ்ட் சபையில் பீடத்திற்கு வருவதென்பது ஆரம்பித்தது. அது ஒரு நல்ல காரியமாகும். நான் அதை செய்யாமல் விட்டு விடக்கூடாது. அதை தொடர்ந்து நாம் செய்ய வேண் டும். அது ஒரு நல்ல காரியம் என்று நான் நினைக்கிறேன். அந்த விதமாகத்தான் அதைச் செய்ய வேண்டும். ஆனால் உண்மையாகவே, அது உங்களை இரட்சிப்பதில்லை. நீங் கள் அங்கே பீடத்தண்டையிலே இருக்கலாம், இரவு முழு வதுமாக ஜெபிக்கலாம், அழலாம், பீடத்தில் மேலும் கீழு மாக நடக்கலாம். உங்களால் கூடுமட்டும் எப்பேற்பட்ட ஒரு சரீர ஒடுக்குதலை செய்யலாம். உங்களிடம் உள்ள எல்லாவற்றையும் விற்று அதை எழைகளுக்கு கொடுக்கலாம். நாற்பது நாட்கள் உபவாசம் செய்து, அதினாலே உங்களால் நடக்க முடியாமல் போகும் அளவிற்கு உபவாசத்தினால் சோர்ந்து போயிருக்கலாம், ஆனாலும் அது உங்களுக்கு எந்த ஒரு நன்மையும் செய்யாது, முதலாவதாக, நீங்கள் ஏற்கவேண்டும்..... அது சரி. அது உங்கள் பங்காகும். தேவன் தம்முடைய பங்கை செய்து முடித்தார். இப்பொழுது, உங்கள் பங்கை நீங்கள் செய்யுங்கள். அது என்னவென்றால் அதை விசுவாசித்தால் என்னும் எளிமையான காரியம் ஆகும். நீங்கள் அதை விசுவாசித்தால், அது காரியத்தை என்றென்றுமாக முற்றுப்பெறச் செய்கின்றது. 30. இப்பொழுது, நீங்கள் அதை மனதின் அளவில் அதை விசுவாசித்து இன்றுமாக அதைக் குறித்து யூகித்துக் கொண்டிருக்கலாம். ஆனால் நீங்கள் அதை உங்கள் இருதயத்திலிருந்து ஒரு தடவை விசுவாசிப்பீர்களானால், அது என்றென்றைக்குமாக காரியத்தை முற்றுப்பெறச் செய்கின்றது. நீங்கள் சுகமாயிருக்கப் போகிறீர்கள் என்று தேவன் அதை உங்களுக்கு வெளிப்படுத்தியிருப்பாரானால், நாளை ஆயிரம் மருத்துவர்கள் உங்களைக் கடந்து சென்று, அவர்களில் ஒவ்வொருவரும் நீ இருபத்து நான்கு மணி நேரத்தில் மரிக்கப் போகின்றாய் என்று அறிவித்தாலும், நீங்கள் அவர்கள் முகத்தைப் பார்த்து சிரிப்பீர்கள். அது சரி. ஆமென். அங்கு தான் அவர் தம்முடைய சபையை கட்டுகின்றார், "இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன்." இப்பொழுது, நீங்கள் உணர்ச்சி வசத்தினாலே இரட்சிக்கப்பட்டிருப்பீர்களானால், எதோ பரிதாபத்திற்குரிய நடந்த சம்பவங்களினால் இரட்சிக்கப் பட்டிருப்பீர்களானால், உங்கள் பக்கத்து வீட்டார் நீங்கள் வந்து உங்கள் இருதயத்தை கிறிஸ்துவுக்கு அளித்து சபைக்கு செல்ல விரும்பின தால் இரட்சிக்கப்பட்டிருப்பீர்களானால், யாரோ ஒருவர் விரும்பினதால் நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள் என்றால், அப்படியானால் அதை நான் சந்தேகிக்கின்றேன். ஆனால் நீங்கள் தாமே, சரியான விவேகத்துடனும், தெளிந்தவர்களாயும் (sober) கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சிந்தப்பட்ட இரத்தத்தின் அடிப்படையாகக் கொண்டு, உங்கள் இருதயத்தின் ஆழத்தில் அவரை உங்களுடைய தனிப்பட்ட இரட்சகராக ஏற்றுக் கொண்டு வருவீர்களானால், அப்போது பாதாளத்தில் இருக்கின்ற எல்லா பிசாசுகளாலும் உங்களை அதினின்று அசைத்துப் போடவே முடியாது. அது சரியே. அது சரி 31. கவனியுங்கள், ஆபேல் தன்னுடைய பலியை காணிக்கையாக செலுத்தினான், கர்த்தராகிய இயேசுவின் வருகையைக் குறித்த ஆவிக்குரிய வெளிப்பாட்டை ஆபேல் கொண்டிருந்ததைக் குறித்து அவனுடைய பலியானது குறிப்பிட்டுக் கொண்டிருந்தது. அங்கே இருந்த அந்த ஆட்டுக்குட்டி, நீங்கள் கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன்..... அவன் அந்த சிறு ஆட்டை அங்கே கிடத்தி, அதன் சிறிய தொண்டையை வெட்டின போது, அது கால்களை உதைத்து, ரத்தம் சிந்திக்கொண்டிருந்தது, அதனுடைய சிறு ரோமமானது முழுவதுமாக இரத்தத்தினால் நனைந்திருந்தது, சத்தமிட்டுக் கொண்டிருந்தது.... ஒரு செம்மறியாடு மரிக்கும் போது அதன் சத்தத்தை கேட்டுள்ளீர்களா? மிகவும் பரிதாபமாயிருக்கும். அது என்னவாயிருந்தது? அது எதைக் குறிப்பிட்டுக் கொண்டிருக்கிறது என்று அவனால் அறிந்து கொள்ள முடியவில்லை, நிச்சயமாக. அது நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைக் குறித்து பேசினது: நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார், துடிதுடித்தார், இரத்தம் பெருக்கெடுத்து ஓடினது, மரித்துக் கொண்டிருந்தார், அவர் சிலுவையில் அந்நிய பாஷையில் பேசிக் கொண்டிருந்தார், நித்தியக் கன்மலையின் மேல் தொங்கினார், அவருடைய சரீரம் முழுவதுமாக இரத்தம் மூடியிருந்தது..... அங்கே ஒவ்வொரு மரத்திலும் ஒரு தேவதூதன் இருந்தான், "கர்த்தாவே, உம்முடைய கரத்தை விடுவித்து இதைச் செய் என்று எங்களை நீட்டும்; நாங்கள் சூழ்நிலையையே மாற்றி விடுகிறோம்" என்று கூறினார்கள் என்று பில்லி சண்டே கூறினார். அங்கிருந்த யூதர்கள், "மற்றவர்களை இரட்சித்தான்; தன்னை தான் இரட்சித்துக் கொள்ளத் திராணியில்லை." "கீழே இறங்கி வா, எங்கள் முன்பாக ஒரு அற்புதத்தை செய் அப்போது நாங்கள் உன்னை விசுவாசிப்போம்" என்று கூறினார்கள். அந்த அதே பழமையான பிசாசு இன்றும் ஜீவித்துக் கொண்டிருக்கின்றான். "கீழே இறங்கி வா, அப்போது நான் உன்னை விசுவாசிப்போம்." இருந்ததிலேயே சிறந்த ஒரு புகழாரத்தை அவருக்கு சூடிக்கொண்டிருந்தார்கள் என்று அவர்கள் உணராமல் இருந்தனர். அவர் தம்மை இரட்சித்துக் கொள்வாரனானால், அவரால் மற்றவர்களை இரட்சிக்க இயலாது. ஆகவே மற்றவர்களை இரட்சிக்கவே தம்மையே அவர் ஒப்புவித்து அளித்தார், தமக்கென அவர் கொண்டிருந்த மகத்தான புகழாரம் என்ன வென்றால் அவர் தாமே... அவர்கள் அதை அறியாமல் அவரைப் புகழ்ந்தனர். சத்துரு தம்மை புகழும்படிக்கு தேவன் செய்வார். ஆமென். தேவனுடைய வார்த்தையின் ஆவிக் குரிய வெளிப்பாட்டைக் காண்பது எவ்வளவு அழகான ஒன்றாக இருக்கின்றது. 32. யோபு, சில இரவுகளுக்கு முன்னர் அவனைக் குறித்து நாம் பேசினோம், வேதாகமத்திலேயே பழைய புத்தகம் அதுவாகும், கோத்திரப் பிதாவாகிய யோபு, பொறுமைக்கும் துன்பம் தாங்கும் ஆற்றல், முடிவுபரியந்தம் நிலைத்திருப்பதற்கு பேர் போன ஒருவன். "முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே...." யோபு தன் நம்பிக்கையில் நிலைத்திருத்தலுக்கு பேர் போன ஒருவன் ஆவான், எதிர்ப்புகள் வந்த போதும், அவனுடைய அயலகத்தார் அவனைச் சுற்றி வந்து, 'இதோ பார், உனக்கு ஏதோ ஒரு வியாதி உள்ளது. இதோ, நீ இரகசியமாக பாவம் செய்துக் கொண்டிருந்தாய்" என்று கூறின போதும் அவன் அசையாமல் உறுதியாக இருந்தான். "இல்லை, நான் பாவம் செய்யவில்லை. நான் என் பாவங்களை எல்லாம் அறிக்கையிட்டேன் சர்வாங்க பலியை செலுத்தினேன், நான் இரகசியமாக பாவம் செய்யவில்லை" என்று யோபு கூறினான். "ஓ, நிச்சயமாக நீ செய்துள்ளாய். நீ இரகசியமாக பாவம் செய்துள்ளாய்." ஆனால் தேவனோ அங்கே ஒரு பரிசுத்தவானோடு ஈடுபட்டுக் கொண்டிருந்தார்: தேவனிடத்தில் வருகின்ற எந்த ஒரு குமாரனும் முதலாவதாக குழந்தையிலிருந்து சரியாக வளர்க்கப்பட வேண்டியவனாக இருக்கின்றான், சிறிது அடிகொடுக்கப்பட்டு, காரியங்கள் முரண்பாடாக செல்லும்படிக்கு செய்யப்பட வேண்டியதாக இருக்கின்றது. உங்கள் எல்லோருக்கும் அப்படி நடக்கப் பெற்றுள்ளீர்களா? அப்படிப்பட்ட காரியங்களை சகித்துக் கொள்ளாத ஒவ்வொருவரும் வேசி பிள்ளைகளாயிருப்பீர்களே, தேவனுடைய புத்திரராய் இருக்க மாட்டீர்கள். ஒரு மனிதன் அவரை தன்னுடைய இருதயத்தில் கண்டிருப்பானானால், அவனுடைய நீதிமானாக்கப்படுதலுக்காக இயேசு உயிர்த்தெழுந்தார் என்று அறிந்தவனாக, இரத்தம் மற்றும் வார்த்தையின் அடிப்படையில் அதே விதத்தில் ஏற்றுக்கொண்டு, அவன் மீது சோதனைகள் வரும்படிக்கு இருக்குமானால். "கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பை விட்டு நம்மை எந்த ஒன்றாலும் பிரிக்க மாட்டாது. ஆமென். எவ ர்களை அழைத்தாரோ, அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார். எவர்களை நீதிமான் களாக்கினாரோ அவர்களை ஏற்கெனவே மகிமைப் படுத்தியுமிருக்கிறார். ஆகவே தேவனுடைய பிரசன்னத்தில், கிறிஸ்துவை உங்கள் இரட்சகராக நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களானால், கலியாண விருந்தில் உங்களுக்காக ஒரு ஆசனம் வைக்கப்பட்டிருக்கின்றது. ஆமென். எனக்கு அது பிடிக்கும். கலியாண விருந்திலே மேஜையின் கீழே உங்கள் கால்களை வைத்துக் கொண்டு ஆட்டுகுட்டியானவருடனே விருந்துண்ணுங்கள், ஆமென். 33. இப்பொழுது யோபு, அவன் பேசுகின்றான்... அவன் தன் வேதகலாசாலை காரியங்கள் எல்லாவற்றினுடனும் இருந்தான்...ஆட்டுக் குட்டியின் இரத்தம் அவனை திருப்திப்படுத்த போதுமானதாக இருக்கவில்லை, அதை அவனு க்கு வெளிப்படுத்த இயலாதிருந்தது. தேவன் அவனிடமாக தம்மை திருப்பிக் கொண்டார். அவன் தன் பருக்களை சுரண்டிக் கொண்டிருந்தான். ஓ, எல்லாமே அவனிடமிருந்து சென்று விட்டது. அது என்ன என்று யோபுவால் புரிந்து கொள்ள முடியவில்லை. "தேவன் அநீதியுள்ளவர் அல்ல என்று எனக்குத் தெரியும், ஆனால் நான் ஏன் இந்த நிலை யில் இருக்கின்றேன்?" என்று கூறினான். யோபு தேவனை சபிக்கச் செய்ய வேண்டும் என்று சாத்தான் எல்லாவற்றையும் கொண்டு அவனை குத்திக் கொண்டிருந்தான். யோபு க்கு அதைக் குறித்து தெரியவில்லை, ஆனால் அவனுடைய விசுவாசமானது உறுதியாக நிலைதிருந்தது. சிறிது காலம் கழிந்து, ஒரு செய்தி கொண்டு வருபவன் வந்தான், எலிகூ, அவனுடன் பேசத்தொடங்கினான், யோபு இந்த வார்த்தைகளை பேசினான்: என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்று நான் அறிந்திருக்கிறேன். அது என்னவாக இருந்தது? அவனுக்கு வந்த ஆவிக்குரிய வெளிப்பாடு ஆகும். "என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசி நாளில் பூமியின் மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன். இந்த தோல் புழுக்கள் இந்த சரீரத்தை அழித்தாலும், என் மாமசத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன்." கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையைக் குறித்த ஆவிக்குரிய வெளிப்பாடு. ஆமென். 34. அங்கு தான் தேவன் தம்முடைய சபையை ஒவ்வொரு முறையும் கட்டினார். ஆவிக்குரிய, வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய சத்தியத்தின் மேலே தான், அந்த ஒரே இடத்தில் தான் அவரால் கட்ட முடியும். யோபு அதைக் கொண் டிருந்தான். நீங்கள் கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். தேவனுடைய சித்தத்தின் சத்தியத்தின் ஆவிக்குரிய வெளிப்பாட்டை ஒவ்வொரு மனிதனும் பெற்றிருப்பானானால், நிறைவேறுதலுக்காக ஆயத்தங்களை செய்து கொண் டிருப்பான். இன்றிரவு ஆழமாக அது செல்கின்றது என்று நான் நம்புகிறேன், இடது பக்கத்தில் உள்ள ஐந்தாவது விலா எலும்பின் கீழாக செல்கிறது என்று நம்புகிறேன். கவனியுங்கள், தேவன் உங்களை சுகப்படுத்தப் போகின்றார் என்று உங்களுக்கு வெளிப்படுத்தப் பட்டுள்ளதென்றால், அதற்காக நீங்கள் ஆயத்தமாகுங்கள்; அவ்வளவு தான் ஆமென். ஆவிக்குரிய வெளிப்படுத்தப்பட்ட சத்தியம் தேவன் ஏதோ ஒன்றை செய்யப் போகின்றார் என்று யோபு அறிந்திருந்தான். அவர் ஒரு மீட்பரை அனுப்பப் போகின்றார். கவனியுங்கள், அதைக் குறித்து சில நிமிடங்களுக்கு நாம் பார்ப்போமாக. 35. யோபு, அதை அறிந்தவனாக... அந்த சிறிய பழை விதை யானது அழுகுகிறதை அவன் கண்டான். "ஒரு விதை நிலத்திற்குள் செல்லும் போது நடப்பதை நான் காண்கிறேன். அந்த பூ தன்னுடைய ஆவியை விடுகின்றது, நிலத்திற்குள் செல்கின்றது. குளிர்காலம் வருகின்றது, உறை பனியாகின்றது, அந்த சிறு விதையானது அழுகும்படிக்குச் செய்கின்றது. ஆனால் வசந்த காலம் வரும் போது அது மறுபடியும் துளிர்த்து மேலே வருகின்றது" என்று கூறினான். மேலும் அவன், "காற்று வருகின்றது அந்த மரத்தை கீழே தள்ளி அதை அப்புறப்படுத்துகின்றது. ஆனாலும் அடிக்கட்டையானது நிலத்தில் இருக்கின்றது. அது வளர்ந்து மேலே வந்து மொட்டுக்களை கொண்டு வருகின்றது, இன்னொரு மரத்தை வெளிகொணர்கிறது. மனுஷனோவென்றால் கீழே படுத்துக் கிடக்கின்றான், ஆம், ஜீவித்துப் போகின்றான். ஒழிந்து போகின்றான். அவன் பிள்ளைகள் துக்கிக்க வருகிறார்கள், அவன் அதை உணரான்..." என்று கூறினான். ஓ, அவன் மறுபடியும் திரும்ப வருவதில்லை. அதைக் குறித்தென்ன? "நீர் என்னைப் பாதாளத்தில் ஒளித்து, உமது கோபம் தீருமட்டும் என்னை மறைத்து, பிறகு... "பாருங்கள், அவன் மனதில் யோசித்துப் பார்க்கின்றான். தனிப்பட்ட அறிவாற்றல், மனதைக் கொண்டு யோசித்தல்... அப்பொழுது சடுதியாக, எந்த ஒரு நீதிமானுக்கும் வியாதியிலிருந்து தப்பித்துக் கொள்ள தேவனால் அருளப்பட்ட வழியிலே வந்துள்ள எந்த ஒரு மனிதனும், யோபு தன்னுடைய வியாயிலிருந்து தப்பித்துக் கொள்ள முயற்சி செய்து கொண்டிருந்தான். அவன் மரிக்கப் போகின்றான் என்று அவன் அறிந்திருந்தான். அவன், "இப்பொழுது, நான் மண்ணுக்குள் செல்வேனானால், அங்கிருந்து எப்படி என்னால் வரமுடியும்; அங்கிருந்து ஒருவரும் வருகிறதை நான் ஒரு போதும் கண்டதில்லை.... நான் எல்லா விதைகளையும் கண்டிருக்கிறேன் பூமிக்குள் செல்கின்ற எல்லாவற்றையும் நான் கண்டிருக்கிறேன், எல்லா விதங்களையும், முன்னடையாளங்களாக வைக்கப்பட்டுள்ள மாதிரிப் படிவங்களை எடுத்து ஆராய்கின்ற (typologist) ஒருவனாக அவன் இருந்தான். நான் கண்டிருக்கிறேன். "மேலும் அவன், "மனு ஷன் கீழேபடுத்து செத்தபின், அவன் எங்கே?" ஆகவே அதை தேவன் வெளிப்படுத்த வேண்டியவராக இருக்கின்றார். ஆகவே அப்பொழுது வேதவாக்கியங்கள் இல்லாதிருந்ததால், தேவன் யோபுவிற்கு தேவனுடைய குமாரனாகிய வருகையின் வெளிப்பாட்டை அளித்தார். அப்பொழுது யோபு எழுந்து நின்ற போது மின்னல்கள் பிரகாசித்தன, இடிகள் முழங்கின, கடைசி நாட்களில் அவன் தன்னுடைய மீட்பரை காணுவேன் என்று அவன் கூறினான். 36. கவனியுங்கள், அவனும் கூட அதற்கான ஆயத்தங்களை செய்தான். இப்பொழுது, சற்று அவைகளில் உள்ள உள்ளார்ந்த காரியங்களை நாம் வாசிப்போமாக. உங்களுக்கு விருப்பமா? "ஆமென்" என்று கூறுங்கள். நாம் இப்பொழுது அவைகளை பார்ப்போம். யோபு, தான் அடக்கம் பண்ணப்படப்போகின்ற இடத்தை அவன் குறிப்பிட்டு அவன் கூறுவதை சற்று கவனியுங்கள். இன்னும் அநேக தீர்க்கதரிசிகள் பிறகு வந்தனர். உதாரணத்துக்கு நாம் இதை எடுப்போம், ஆபிரகாம், சாராள், வேதாகமத்தில் காணப்படுகின்ற இனிமையான தம்பதிகள். ஆபிரகாம் சாராளை நேசித்தவனாக, அவள் மரித்த போது எதோ ஒரு இடத்தில் அவன் அவளை அடக்கம் பண்ணவில்லை. ஏதோ ஒரு காரியத்தைக் குறித்த ஆவிக்குரிய வெளிப்பாட்டை ஆபிரகாம் கொண்டிருந்தான், யோபு கொண்டிருந்த அதே காரியத்தை, வெளிப்பாட்டை அவன் கொண்டிருந்தான். ஆகவே அவன் சென்று, யோபு அடக்கம் பண்ணப்பட்டிருந்த கல்லறைக்கு அருகில் ஒரு நிலத்தை வாங்கினான், சரியாக பாலஸ்தீனாவில் வாங்கி, அங்கே சாராளை அடக்கம் பண்ணினான். அவனுக்கு வெறுமனே கொடுக்கப்பட்டு அதை அவன் எடுத்துக் கொள்ளவில்லை. அவன் நிறைய சேக்கல் வெள்ளியைக் கொடுத்து அதை அடக்கம் பண்ணுகிற நிலமாக அதை சொந்தமாக வாங்கியுள்ளான் என்று ஊரார் முன்னிலையில் உறுதிப்படுத்தினான். உங்களால் அதைக்காண முடிகின்றதா? அவன் அங்கே சாராளை அடக்கம் பண்ணினான். அநேக வருடங்கள் கழித்து, ஆபிரகாம் மரித்த போது, அவன் கொண்டு போகப்பட்டு சாராளுடன் அடக்கம் பண்ணப்பட்டான். ஆபிரகாம் ஈசாக்கை பெற்றான், அவனும் ஆபிரகாமோடே அடக்கம் பண்ணப்பட்டான், ஈசாக்கு யாக்கோபை பெற்றான், யாக்கோபு அங்கே தூரத்திலே எகிப்திலே மரித்தான், தேசத்திற்கு வெளியில், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு வெளியில் மரித்தான். ஆனால் அவன் நினைவில் வைத்திருந்தான், அவன் ஆவிக்குரிய மனிதன் ஆவான். அவன், "யோசேப்பே, என் மகனே, சற்று வா" என்றான். யோசேப்பு ஒரு தீர்க்கதரிசி ஆவான். அவன், "உன் கையை என் தொடையின் மீது வை, ஒரு இரவில் நான் பரிசுத்த ஆவியானவருடன் போராடின போது, அவர் என்னை நொண்டியாக்கினார், அப்போதிலிருந்து நான் நொண்டி நொண்டி நடந்தேன். உன் கையை இங்கே வை, பரிசுத்த ஆவியானவர் தம்முடைய கரத்தை வைத்த இடத்திலே வைத்து, இங்கே என்னை அடக்கம் பண்ண மாட்டேன் என்று ஆபிரகாமின் தேவன் பேரிலே ஆணையிட்டு கொடு" என்று கூறினான். ஏன் அப்படிக் கூறினான்? குறிப்பிட்ட இடத்தில் அடக்கம் பண்ணப்படுவதினால் என்ன வித்தியாசத்தை அது உண்டாக்கப் போகிறது? ஆனால் அவன் ஒரு தீர்க்கதரிசி ஆவான். அவன் ஆவிக்குரிய ஒரு வெளிப்பாட்டை பெற்றிருந்தான். "இங்கே என்னை அடக்கம் பண்ணாதே. நான் கடந்து போன பிறகு, என் மக்களோடே கூட நான் சேர்க்கப்படுவேன். என்னை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு திரும்பி எடுத்துச்செல், அங்கே என்னை அடக்கம் பண்ணு" என்று கூறினான். அதற்கு யோசேப்பு, "நான் ஆணையிட்டுக் கொடுக்கிறேன்" என்றான். ஆகவே அவன் தன்னுடைய தகப்பனாகிய ஈசாக்கை கொண்டு சென்று, அடக்க நிகழ்ச்சிக்குப் பிறகு ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு யோபு, அந்நாட்களில் இருந்த எல்லா கோத்திரப் பிதாக்களுடனே அடக்கம் பண்ணினான், பிறகு யோசேப்பும், தனக்கு வயதாகின போது, மரிக்கும் தருணம் வந்த போது, அவன் ஆவிக்குரிய வெளிப்பாட்டை கொண்டிருந்தான். அவனும், "என்னை இங்கே எகிப்தில் அடக்கம் பண்ண வேண்டாம், என்னை ஒரு பெட்டியில் மாத்திரம் வைத்து விடுங்கள். ஏனென்றால், ஒரு நாளிலே கர்த்தர் உங்களை சந்திப்பார். அப்போது நீங்கள் புறப்பட்டு செல்லும் போது, என் எலும்புகளையும் உங்களோடே எடுத்துச் சென்று அங்கே வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திலே அவைகளை அடக்கம் பண்ணுங்கள்" என்று கூறினான். ஏன் அப்படிக்கூறினான்? 37. யோசேப்பு இஸ்ரவேலுக்கு ஒரு உயர்ந்து நின்ற அடையாளமாக இருந்தது போல இன்று சபைக்கு கிறிஸ்துவும் அப்படியாக இருக்கின்றார். ஆளோட்டியினால் தன்னு டைய முதுகு அடிக்கப்பட்டு தழும்புகளாக இருந்த ஒவ்வொரு பரிதாபத்திற்குரிய ஏழை இஸ்ரவேலன், அந்த பழைய ஈயத்தால் செய்யப்பட்ட சவப்பெட்டியைக் கடந்து சென்றான் (சில வருடங்களுக்கு முன்னர், ஒரு அருங்காட்சியகத்தில் யோசேப்பு கிடத்தப்பட்ட அந்த சவப்பெட்டியின் மேல் என் கையை வைத்தேன் என்று நினைக்கிறேன், அது எகிப்தில் ஈயத்தால் செய்யப்பட்டிருந்தது.) ஆகவே அங்கே அந்த ஈயத்தால் செயப்பட்ட சவப்பெட்டியில், அந்த தீர்க்கதரிசியின் எலும்புகள் இருந்தன, அதைக் கடந்து சென்ற ஒவ்வொரு இஸ்ரவேலனும், அதை உற்றுப்பார்த்து "என்றாவது ஒரு நாளிலே நாம் வெளியே செல்லப் போகிறோம். அவ்விதமாக தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறார். ஒரு நாளிலே இந்த எலும்புகள் மற்றொரு தேசத்திற்கு கொண்டு செல்லப்படும், அதனுடன் கூட நாமும் சொந்த தேசத்துக்கு செல்லப்போகிறோம்" என்று கூறினான். அது தான் இன்றைக்கு ஒவ்வொரு கிறிஸ்தவனின் நம் பிக்கையாகும், யோசேப்பு கல்லறையில் கிடத்தப்பட்டு ஒரு நிழலாக இருந்தான். கிறிஸ்து கல்லறைக்கு வெளியே ஒரு நிழலாக இருக்கின்றார், உயிர்த்தெழுதல். உங்களால் அதைக் காண முடிகின்றதா? 38. ஆகவே எனக்கு நினைவில் இருக்கின்றது, என் மனைவியை நான் இழந்த பிறகு... பில்லி, அதைப் போன்று மிகச் சிறிய ஒருவனாக இருந்தான்... நான் அவனுக்கு அன்புள்ள அப்பாவும் அம்மாவுமாக இருந்தேன். இரவு நேரத்தில் நட ந்தோம். நாங்கள் ஏழைகளாக இருந் தோம். நாங்கள் ஒரே ஒரு பழைய அறையில் தான் வாழ்ந்தோம். பகலில் அந்த சிறு பையனை அண்டை வீட்டாரிடத்தில் விடுவேன், நான் லைன்மேன் உத்தியோகத்தில் இருந்தேன், உண்பதற்கு தேவைப்படுவதற்காகவும் மற்ற செலவுகளுக்கான தேவைகளை சந்திக்க முயற்சித்துக் கொண்டிருந்தேன். குளிரில் இரவும் முழுவதுமாக நெருப்பு மூட்டி வைக்க ஆகும் செலவிற்கு என்னால் பணம் செலவிட முடியாதிருந்தது, ஆகவே நான் அவனுடைய சிறு கோக்கோ கோலா பாட்டிலை எடுத்துக் கொள்வேன். மற்றவைகளை அவன் கீழே போட்டு உடைத்து விடுவான். என்னால் அந்த உயர்தர சுத்தமான பாலூட்டும் பாட்டில்கள் வாங்க இயலாது, ஆகவே அவனுக்கு கோக்கோ கோலா பாட்டிலை எடுத்து, அதன் மீது ஒரு சிறு குப்பியை வைத்துவிடுவேன். இரவு நேரங்களில் அதை எடுத்து என் தலையின் கீழாக வைப்பேன், அதை என் உடம்பிற்கு அடியில் வைப்பேன். என் சரீரத்தின் வெப்பம் அந்த பாட்டிலை வெப்பமாக வைத்திருக்கும், அவன் இரவில் எழுந்தால், அழ ஆரம்பிப்பான், உடனே இந்த பாட்டிலை அவன் வாயில் வைப்பேன். அவன் சூடான பாலை குடிப்பான். பகலில் நாங்கள் வெளியே செல்லும் போது, அதை என் கோட்டில் என் கையிற்கு கீழாக வைத்துக் கொள்வேன். நாங்கள் இருவரும் தோழர்களாக இருந்தோம். 39. இது நினைவில் வருகின்றது, அவள் கடந்து சென்ற பிறகு ஒரு மாலைப் பொழுதில், அவனுடைய சிறு சகோ தரி பிறக்கும் முன்னர், அவள் முச்சுத்திணறலால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தாள். நான் அவளை அழைத்துச் சென்று .... அங்கே இருந்த அந்த பழைய ஓக் மரத்தினண்டையில் மேலும் கீழுமாக நடப்பது வழக்கம். அதை மறக்க மாட் டேன்...வீட்டுக்குள் வந்தேன், அவளுக்கு சிறிது சுவாசம் மாத்திரமே இருந்தது, அவள் மூச்சுத்திணறலால் மிகவும் அவதிப்பட்டுக் கொண்டிருந்தாள். அவள் கடந்து சென்று ஒரு வருடம் சென்ற பிறகு, அவள் இறப்பை என்னால் மேற்கொள்ளவே முடியவில்லை, முடியவில்லை. பில்லியை என் கரத்தில் வைத்துக் கொண்டிருந்தேன். அவனும் தன் அம்மாவுக்காக அழுது கொண்டிருந்தான். அவனை ஏந்திக்கொள்ள அவனுடைய அம்மா இல்லை. அங்கே அந்த பின் புறத்தில் முன்னும் பின்னுமாக அந்த சிறு பாதையில் மறுபடியுமாக நடந்து கொண்டிருந்தேன், அப்பொழுது அவன், "அப்பா, என் அம்மா எங்கே?" என்று கேட்டான். அதற்கு நான், "தேனே, அவள் பரலோகத்திற்கு சென்று விட்டாள்" என்று கூறினேன், அவன் மேலும் அழாதபடிக்கு என் அழுகையை நான் அடக்கிக் கொண்டேன். அதற்கு அவன், "நான் அவர்களை மறுபடியுமாக பார்ப்பேனா?" என்றான். நான்," ஆம், இருதயத்துக்கு இனியவனே, அவளை மறுபடியும் காண்பாய்" என்றேன், அந்த விதமாக நான் அவன் தோளின் மீதுதட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தேன், அவன் தன் சிறு தலையை ஆட்டிவிட்டு, "அப்பா, அப்பா!" என்று கூறினான். நான், "என்ன வேண்டும் தேனே" என்றேன். அவன், "அங்கே மேலே அந்த மேகத்தின் மீது என் அம்மாவை நான் காண்கிறேன்" என்றான். ஓ, என்னே. என்னை மாய்த்துக் கொள்ள வேண்டும் என்பது போல உணர்ந்தேன். அது என்னவாயிருந்தது? ஒருக்கால் தேவன், எனக்குத் தெரியாது, என்னால் கூறமுடியவில்லை. ஆனாலும் எப்படியாயினும்... 40. பிற்பாடு, ஒரு நாளில், ஒரு ஈஸ்டர் காலைப் பொழுதில் கல்லறைக்குச் சென்றேன், ஒரு சிறிய ஈஸ்டர் பூவை எடுத்துச் சென்றேன். பில்லியின் சிறு சகோதரியும் தாயாரும், அவனுடைய தங்கை அவன் தாயின் கரத்தில் கிடத்தப்பட்டு... அவளை அங்கே நாங்கள் புதைத்தோம். அந்த போதகர் என்னை பார்த்த அந்த நாள் எனக்கு நினைவில் இருக்கிறது, சகோதரன் ஸ்மித், என்னை நோக்கிப் பார்த்தார், கண்ணீர் அவருடைய கன்னங்களில் வழிந்தோடிக் கொண்டிருந்தது. அவர் சிறிதளவு மண்ணை எடுத்து, "சாம்பலுக்கு சாம்பல். மண்ணுக்கு மண்..." என்று கூறினார், அந்த மண் துகள்கள் சவப்பெட்டியின் மீது கொட்டப்பட்டு சிதறிக் கொண்டிருந்த சத்தம் எனக்கு கேட்டது. நான், "என்னே....."என்று நினைத்தேன். அந்த நேரத்திலே காற்று வீசி, அந்த பழைய பைன் மரங்களினூடாக வீசி விசில் சத்தம் போல ஒலித்து, "அங்கே நதிக்கு அப்பால் ஒரு தேசம் இருக்கிறது.... விசுவாசத்தின் அளவைக் கொண்டு மாத்திரமே அதன் கரைகளை நாம் அடைவோம். ஒருவர் பின் ஒருவர் நாம் அந்த இடத்தை அடைவோம். அங்கே அழியாமை நிலையோட நாம் வாசம் செய்வோ ம். ஒரு நாளிலே உனக்கும் எனக்கும் அவர்கள் அந்த பொன் மணியோசையை ஒலிப்பார்கள் கூறுவது போல இருந்தது. 41. நான் கல்லறைக்குச் சென்று கொண்டிருந்தேன்; அவன் தன் கரங்களில் சிறு பூங்கொத்தை வைத்திருந்தான். அது அதிகாலை வேளையில் பொழுது விடிந்து கொண்டிருந்தது. நான் கல்லறைக்கு அருகில் நெருங்குகையில் என் தொப்பியைக் கழற்றினேன். அந்த சிறு பையன் அழ ஆரம்பித்தான், அவனை அன்பாக அணைத்து தட்டிக் கொண்டி ருந்தேன். என் கரத்தினால் அவனை அணைத்தேன். அவன், "அப்பா, அம்மா இங்கே கீழே இருக்கிறார்கள் அல்லவா? நான் இதை தோண்டி அம்மாவை மேலே ஒரு நிமிடத்துக்கு கொண்டு வந்து அவர்களோடு பேசலாமே? என் சிறு தங்கை ஷாரோனும் கூட இருக்கின்றாளே....." என்றான். நான், "தேனே நாம் பூவை கீழே வைப்போம்" என்றேன். நான் பூவை கீழே வைத்தேன், என் கரம் அவனை அணைத்திருந்தது, நான், "தேனே, பையனே, பூமிக்குரிய பிராயணத்தின் எஞ்சிய காரியமானது கிழே கிடக்கின்றது, ஆனால் அங்கே சமுத்திரத்திற்கு அப்பாலே, அங்கே, சூரியன் எழும்புகின்ற அந்த இடத்தில், இக்காலையில் ஒரு காலியான கல்லறை உள்ளது. அவர்கள் அவருக்குள்ளாக இருக்கின்றனர். ஒரு மகிமையான நாளிலே, நாம் மறுபடியு மாக அவர்களைக் காணப் போகிறோம்" என்று கூறினேன். என்ன? நான் மறுபடியும் அவளைக் காணப்போகிறேன் என்று கூறுகின்ற ஒரு காலி கல்லறை அங்கே அப்பாலே உள்ளது. ஒரு நாளிலே நாம் அவர்களை மறுபடியும் சந்திப்போம். 42. என்னே, எப்படியாக அந்த பழங்கால யூதர்கள் அந்த சவ ப்பெட்டிக்குள்ளாக எட்டிப்பார்த்து, அந்த எலும்புகளைப் பார்த்து, என் றாவது ஒரு நாளிலே தாங்கள் இந்த இடத்தை விட்டு செல்லப் போகிறோம் என்று அறிந்து கொண்டார்கள். பிறகு மோசே இஸ்ரவேல் புத்திரரை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்கு திரும்பி கொண்டு போக வந்த போது, யோசேப்பின் எலும்புகளை ஒன்று சேர்த்து எடுத்து, அவனுக்கு முன்பாக அவைகளை சுமந்து சென்றனர், அவைகளை பாலஸ்தினாவுக்கு கொண்டு சென்று பாலஸ்தீனாவில் அந்த எலும்புகளை புதைத்தான். அப்படி ஏன் செய்தனர் என்று தெரியுமா? ஆவிக்குரிய வெளிப்பாடு. கவனியுங்கள், உயிர்த்தெழுதலின் முதற்பலன்கள் பாலஸ்தினாவிலிருந்து தான் வெளிவரும் என்றும் எகிப்திலிருந்து வராது என்றும் அந்த தீர்க்கதரிசிகள் அறிந்திருந்தனர்! உயிர்த்தெழுதல் எகிப்துக்கு வந்து கொண்டிருக்கவில்லை; அது பாலஸ்தீனாவுக்கு வந்து கொண்டிருந்தது. அதன் காரணமாகதான் தாங்கள் பாலஸ்தீனாவில் அடக்கம் பண் ணப்படவேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். அதன் காரணமாகத்தான் என்னை இயேசுவில் அடக்கம் பண்ணுங்கள் என்று நான் கூறினேன். இயேசுவில் உள்ளவர்களை, இரண்டாம் வருகையில் அவருடனே கூட தேவன் அவர்களைக் கொண்டு வருவார். அதைக் குறித்து உலகம் என்ன சொன்னாலும் எனக்கு கவலையில்லை, நான் மரித்து கிறிஸ்துவுக்குள்ளாக அடக்கம் பண்ணப்படுவேனாக. அல்லேலூயா. ஆவிக்குரிய வெளிப்படுத்துதல் ... 43. நான் கிறிஸ்துவுக்குள்ளாக அடக்கம் பண்ணப்பட்டிருக்கும் வரைக்குமாக, என்னை பரிசுத்த உருளையன் என்றும், அதிதீவிர மூட பக்தி கொண்டவன் என்றும், நீங்கள் விரும்பும் எந்த பெயரையும் வைத்து என்னை அழைக்கலாம். நம்முடைய ஜீவன் கிறிஸ்து மூலமாக தேவனுக்குள்ளாக மறைந்திருக்கிறது, பரிசுத்த ஆவியால் முத்திரையிடப் பட்டிருக்கிறது. அதுவே எனக்கு போதுமானதாகும். ஓ, அதற்குள்ளாக செல்லும்படிக்கு உந்தித் தள்ளப்பட்டேன். நம் ஒவ்வொரு வருக்கும் முன்பாக ஒரு பெரிய கருத்த அறையானது (chamber) இருக்கின்றது. நம் இருதயம் ஒவ்வொரு முறையும் துடிக்கையில் இன்னும் ஒரு இருதயத் துடிப்பும் அதன் அருகாமையில் நாம் இன்னும் சென்று கொண்டிருக்கின்றோம். வருகின்ற நாட்களில் எதாவதொன்றில் நாம் அதில் பிரவேசிக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். நான் பாதையின் முடிவில் வரும்போது, ஒரு கோழையாக செல்ல எனக்கு விருப்பமில்லை. நான் அவரு டைய நீதியின் வஸ்திரத்தால் சுற்றப்பட்டவனாக, அதனுடனே நான் சென்று, அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையினால் அவரை அறிந்திருக்கின்றேன் என்றும் அவர் மறுபடியுமாக வரும் போது, மரித்தோரிலிருந்து என்னை அழைப்பார் என்றும் அறிந்தவனாக நான் செல்வேன். அது தான், "அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையில் அவரை அறிந்தவனாக" என்று பவுல் கூறுகிறான், "அவர் என்னை அழைக்கும் போது நான் மரித்தோரிலிருந்து வெளியே வருவேன் என்று அறிவேன். "கிறிஸ்துவுக்குள்ளாக அடக்கம் பண்ணப்பட்டு, உலகத்துக்கு மரித்து, கிறிஸ்துவுக்குள்ளாக உயிரடைந்து, மேலான காரியங்களுக்கு நோக்கிப் பார்த்து, பரலோக காரியங்களை நோக்கிப் பார்த்தல், அங்கே கிறிஸ்து தாமே மகத்துவமானவருடைய வலது பாரிசத்தில் அமர்ந்து நம்முடைய அறிக்கையின் பேரில் பரிந்து பேசும்படிக்காக என்றென்றுமாக ஜீவித்துக் கொண்டிருக்கின்றார், அப்போது நாம் விசுவாசத்தில் முன்னேறி ஜெயங்கொண்டே முன் செல்வோம். உங்களால் அதைக் காண முடிகின்றதா? ஆவிக்குரிய வெளிப்பாடு. 44. அந்த உயிர்த்தெழுதல் நடப்பதற்கு நான்காயிரம் வருடங்களுக்கு முன்னதாகவே அந்த தீர்க்கதரிசி எப்படியாக கண்டான் என்பதைக் குறித்து நான் சிந்தித்துப் பார்க்கின்றேன். வெளிப்படுத்தப்பட்ட ஆவிக்குரிய சத்தியத்தின் பேரிலே விசுவாசம் வைத்திருந்த அவர்கள் ஏமாற்றமடைந்தனரா என்று நாம் பார்ப்போமாக. ஏற்ற காலத்திலே இயேசு வந்தார், ஒரு கன்னியின் மூலமாக பிறந்தார், ஒரு மாட்டு தொழுவத்தின் வாசல் வழியாக வந்தார், மரண தண்டனையின் மூலமாக வெளியில் சென்றார். அவர் கல்வாரியில் மரித்த போது, கொல்கொதாவிலே அந்த நாளிலே, சிலுவையில் தொங்கின போது, வானங்கள் ஒளியைக் கொடாமற் போயின, பூமி குலுங்கி அதிர்ந்தது. இயேசு மரித்த போது, முழு உலகமே அது தேவகுமாரனுடைய மரணம் என்று அடையாளம் கண்டு கொண்டது. 45. இங்கே சில காலங்களுக்கு முன்னர், ரீடர்ஸ் டைஜஸ்ட் பத்திரிக்கையை வாசிக்கின்ற நீங்கள்... பிரசங்கிகளிடமிருந்து அநேக தகவல்கள் எனக்கு கிடைக்கப் பெற்றது. ஊழியக்காரார்களால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்பது வெட்கக் கேடான ஒன்றாகும். "ஆவியுலக தொடர்பாடு கொண்ட ஒருவளான திருமதி பைப்பர், அவளை உங்களுக்கு தெரியும், அவளிடமாக சுமார் பன்னிரண்டு பக்கங்களை கொடுத்தனர். அந்த பத்திரிக்கையில் அவர்கள் எழுதியிருந்தனர், நாற்பது அல்லது ஐம்பது வருடங்களுக்கு முன்னர் இருந்த காரியங்களைக் குறித்து அவளை கேட்டிருந்தனர். அந்த சிறிய குடும்பப் பெண் ஒரு நாளிலே அவள் நினைவிழந்து கடந்த கால நிலைக்குள் சென்றாள், அப்போது அவள் மரித்தவர்களுடன் பேசுவாள். நீங்கள்... ரீடர்ஸ் டைஜஸ்ட், அது அக்டோபர், சுமார் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு முன்னர் என்று நினைக்கிறேன், எப்படியாக அது... அதை நாங்கள் எங்கோ வைத்துள் ளோம். நான்...... அது என்னிடம் இல்லை. அந்த நேரத்தில் சகோதரன் பாக்ஸ்டர் அதை வைத்திருந்தார் என்று நினைக் கிறேன். எப்படியாக அவளை அவர்கள் எடுத்து, அவளுடைய ஆடைகளை மாற்றி, அவளை எகிப்துக்குள்ளாக அல்லது ஏதோ ஓரிடத்துக்கு அனுப்புவார்கள், ஒரு பிரஞ்ச் மனிதனை கொண்டு வருவார்கள், குறிப்பிட்ட ஒரு மனித னை அழைத்து வருவார்கள் (அவன் மாறு வேஷத்தில் இருப்பான்) அப்போது அவள் மரித்த நபரை வெளியே வரும்படிக்குச் செய்வாள், அதே குரலில் பேசுவாள், மரித்த அந்த நபர் செய்த எல்லா காரியத்தின் படியும் செய்வாள். அப்போது அவர்கள், "அது உண்மையாகவே... போலியான காரியங்கள் அநேகம் உள்ளன, ஆவியுலக தொடர்பு கொண்டவர்கள் மற்றும் மரித்த ஆவிகளுடன் தொடர்பு கொள்பவர்கள் என்ற நிறைய பாவனை காரியங்கள் இருக்கின்றனர், ஆனால் ஒன்று உள்ளது, அதை இவர்களால் கவிழ்த்துப் போட முடியவில்லை ஒருவர் என்னிடமாக, "நீங்கள் அதை நம்புகிறீர்களா?" என்று கேட்டார். ஆம், ஐயா, அப்படிப்பட்ட காரியங்கள் உண்டு என்று வேதாகமம் போதிக்கின்றது, எந்தோரின் சூனியக்காரி; அது ஒரு பிசாசாகும். சரியே. ஆனால் அவளைப் போல போலியாக செய்கின்ற நபர்கள் நிறைய பேர்கள் இருக்கின் றார்கள். 46. சில காலத்திற்கு முன்னர் இதைக் குறித்த ஒன்றை காவல்துறை நீதிமன்றத்தில் அவர்கள் நிருபித்தனர், நகரத்தின் பெரிய நீதிபதி ஒருவர் அவருடைய தாயாரின் ஆவியை தொட்ட போது அவளுடைய கரங்களை தொட்டார் என்று கூறப்பட்டது. அடுத்த நாள் காலையில் அது ஒன்றுமல்ல, அது போலியான ஒன்று என்றும், ஆனால் பாலாடை செய்ய அழுத்துவதற்குரிய துணிதான் அது என்று கூறினா ர்கள். அது என்னவாயிருக்கின்றது? அது காசு சம்பாதிக்கும் திட்டமாகும், ஆவியுலக தொடர்பு கொள்ளக்கூடிய உண்மையான நபர் போலவே போலியாக காண்பிக்க முயற்சித்தல் என்பதாகும். அவர்கள் மத்தியில் அதை அவர்கள் கொண்டிருப்பார்கள் என்றால், இந்த பக்கத்திலும் நம்மிடையே அப்படிப்பட்ட காரியங்கள் இருக்கின்றன, உண்மையான கிறிஸ்தவனைப் போல போலியாக செய்த காண்பிக்க முயற்சித்தல். பாவனை விசுவாசிகள். ஆமென். கவனியுங்கள், அப்போது யாரோ ஒருவர், சுமார் ஒரு வருடம் கழித்து, கலிபோர்னியாவில், காம்ப் கிரவுண்ட்ஸ் இடத்தில் நடைபெற்ற என் கூட்டத்தை குறித்து உள்ளது, ரீடர்ஸ் டைஜஸ்ட் பத்திரிக்கையை நீங்கள் வாசித்துப் பாரு ங்கள், அக்கூட்டத்திற்கு டானி மார்ட்டனை கொண்டு வந்தார்கள். உங்களில் நிறைய பேர் அதை வாசித்திருப்பீர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. டானி மார்ட்டனின் அற்புதம் என்பதிலிருந்து வாசியுங்கள், அவனை எப்படியாக கனடாவிலிருந்து அழைத்து வந்த போது, அதைக் குறித்து அரு மையாக எழுதியுள்ளார்கள், எப்படியாக அவன் பிரசங்க மேடைக்கு வந்தான் என்றும், சிறிய பையன், சரீரம் முழுவதுமாக அப்படியே உருக்குலைந்து விகாரமான தேகத்தைக் கொண்டிருந்தான் என்றும் எழுதப்பட்டுள்ளது. மேலும் அந்த சுவிசேஷகர் ஒரு கேள்வியும் கூட அவனிடமாக கேட்கவில்லை என்றும், அவர் அந்த பிள்ளை நோக்கிப் பார்க்க மாத்திரம் செய்தார் என்றும், அவன் எங்கிருந்து வருகின்றான் என்பதையும் அவனிடம் கூறினார் என்றும், மேயோ பிரதர்ஸ் மருத்துவமனைக்கு அவன் சென்றதைக் குறித்தும், ஒன்றுமே செய்ய முடியாது என்று திருப்பி அனுப்பப்பட்டதைக் குறித்தும், எல்லாவற்றும் அந்த பத்திரிக்கையில் எழுதப்பட்டுள்ளது. பிறகு அந்த பையனுக்கு என்ன சம்பவித்தது என்று எழுதப்பட்டுள்ளது. சரியாக வார்த்தைக்கு வார்த்தை அந்த நிகழ்வு விவரிக்கப்பட்டிருந்தது. 47. ஆகவே பிறகு பிரசங்கிகள் கருத்து கூற ஆரம்பித்தனர், கடிதங்களை அனுப்பினர், "சகோதரன் பிரன்ஹாம், எனக்கு எப்போதுமே ஒருவித சந்தேகம் இருந்து கொண்டேயிருந்தது. நீங்கள் மரித்த ஆவிகளுடைய தொடர்பு கொள்கின்ற ஒரு நபர் என்று இப்பொழுது எனக்கு புரிகின்றது" என்று கூறுவர். ஒரு தேவனுடைய மனுஷனுக்கு இது கூட தெரிந்து கொள்ள முடியவில்லையென்றால் வருத்தத்திற்குரிய ஒன்று தான். உடனே நான் ஒரு கடிதத்தை எழுதி பிரசுரித்தேன், வழக்கமான ஒரு சுற்றறிக்கையை அனுப்பினேன், அதில் "ஏன் அப்படியாக நடக்கின்றது? இயேசுவும் கூட இங்கே இருந்த போது அதேவிதமாகத்தான் கூறினார்களே." என்றேன். முற்றிலுமாக சரி. அவர்களால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை. போலியாக செய்து காண்பிக்கப்படுதல், பிசாசு வைத்துள்ள எல்லா காரியங்களும், அதை அவன் அதே விதத்திலே செய்து காண்பிக்கும்படிக்கு கிறிஸ்துவினிடமிருந்து அப்படியே அதை காப்பி (copied) அடித்துள்ளான். அப்படி செய்வதானது உண்மையாக இருக்கின்ற ஒன்றை இன்னும் சிறப்பான விதத்தில் ஆக்குகின்றது. கவனியுங்கள், நீங்கள் ஒரு போலி டாலர் நோட்டை எடுத்து பார்ப்பீர்களானால், அது எதை காண்பிக்கும் என்றால் எங்கோ ஓரிடத்தில் உண்மையான டாலர் நோட்டு உள்ளது என்பதையே காட்டுகின்றது. இப்பொழுது, ஒரு போலி டாலர் நோட்டை நீங்கள் பெற்றால் என்ன செய்வீர்கள்? முதல் காரியமாக நீங்கள் அந்த நோட்டை எடுத்து அதன் தரத்தை கையினால் தொட்டு பார்ப்பீர்கள். உண்மையான டாலர் நோட்டானது வெறும் காகிதத்தால் செய்யப்பட்டிராது. அது சில்க், பட்டைக் கொண்டு செய்யப்பட்டிருக்கும். ஒரு உண்மையான டாலர் நோட்டு வழக்கமாக உபயோகிக்கப்படும் காகிதத்தை கொண்டு செய்யப்படாது. அதன் தரத்தை தொட்டு, தடவிப்பார்த்து தெரிந்து கொள்ளலாம். 48. இப்பொழுது, அவள் என்ன செய்தாள் என்பதை சற்று பாருங்கள், மற்றும் கூட்டத்தில் பரிசுத்த ஆவியானவர் என்ன செய்கிறார் என்பதையும் பாருங்கள். அவள் என்ன செய்தாள், ஏறக்குறைய ஐம்பது வருடங்களாக இந்த ஆவியுலகு தொடர்பு கொள்ளுகிற வேலையை செய்து வருகின்றாள், அதில் ஒரு முறைகூட தேவன் என்பது கூறப்படுவதில்லை, அல்லது கிறிஸ்து என்று ஒருக்காலும் சொல்லப்படுவதில்லை, அல்லது சுகமளித்தல் என்று சொல்லப்படுவதில்லை, இரட்சிக்கப்படுதல் என்று ஒருக்காலும் அதில் சொல்லப்படுவதில்லை, நித்திய தண்டனை என்று சொல்லப்படுவதில்லை, அது என்னவென்றால் ஏதோ ஒரு வித மான அர்த்தமற்ற காரியத்தைக் குறித்து தான் உள்ளது, அநேக வருடங்களுக்கு முன்னர் ஒரு மரித்த ஒரு மனிதன் யாரோ ஒருவரோடு வாழ்ந்தார் என்றும், அவன் சென்ற இடங்களைக் குறித்தும், செய்த காரியங்களைக் குறித்தும், அதில் எந்த பிரயோஜனமான ஒன்றுமே இல்லை. அது போலியான ஒன்று என்று காண்பிக்கின்றது. மேலும் மற்றும் ஒரு காரியம், ஒரு டாலர் நோட்டில் நாம் செய்ய வேண்டிய சிறந்த ஒரு காரியம் என்னவென்றால், அதில் உள்ள எழுத்துக்களை, எண்களை எடுத்துவிட்டு, அதை அச்சடிக்கும் இடத்திற்கே திரும்ப அனுப்பி, அந்த அச்சடிக்கும் இடத்திற்கு இதற்கும் ஏதாவது சம்பந்தம் உள்ளதா இல்லையா என்று பார்ப்பதே ஆகும். அது சரி தானே? ஆம், அப்படித்தான் அதை சோதித்து பார்க்க வேண்டும். வேதாகமத்தை எடுத்துக் கொண்டு காரியம் என்ன மற்றும் என்னவாயிருக்கின்றது என்று பாருங்கள். அச்சடிக்கும் கூடம் டாலர் நோட்டு எப்படிப்பட்டது என்று நிருபிக்கும். அது சரியா? ஆமென். ஓ, எப்படியாக... இது தான் காரியம் நண்பர்களே, நீங்கள் எனக்கு சில நிமிடங்கள் அளிப்பீர்களானால், எனக்கு உதவுங்கள் எனக்காக ஜெபியுங்கள், நான் கூற விழைவது என்னவென்றால், "நான் அதை காண்பிப்பேன்...." என்று கூற விழையவில்லை. என்னால் அதை செய்ய முடியாது. அதன் வழியானது எப்படி உள்ளது என்றே என்னால் விவரிக்க முடியும். தேவன் தாம் அதை உங்களுக்கு காண்பிக்க முடியும். 49. இங்கே உள்ள இந்த கோட்டைப் போன்று என்று வைத்துக் கொள்வோம். இதினுள்ளே உள்ள எல்லாருமே முடிவைக் கொண்ட மானிடர்கள். இந்த பக்கத்திலோ, அல்லது அந்த பக்கத்திலோ, மனிதர் ஒரு பக்கத்தினால் வருகின்ற செல்வாக்கினால், இயல் விளைவினால், பாதிப்பினால் மேற்கொள்ளப் படுகிறார்கள். இந்த பக்கம் தேவனிடமிருந்து இயல் விளைவு, செல்வாக்கு வருகின்றது. இந்த பக்கத்தில் பிசாசிடமிருந்து இயல் விளைவு, செல்வாக்கு வருகின்றது. இப்பொழுது, நாம் இந்த உலகத்தின் இருள் மற்றும் களிகூருகின்ற கிளர்ச்சி (gaiety), தாறுமாறான நிலை யில் விளைந்த அசுத்தம், பாவம் மற்றும் பிரிவினைகள் என்பதான மகா பெரிய கதம்ப திரட்சியை நாம் எடுத்துக் கொள்வோம். சிறிது இடைவெளிப் பொழுதில், ஒரு சிறிய வெள்ளை நிற புள்ளியை அதில் நீங்கள் காணலாம்; அது ஒரு ஒளியைப்போல இருக்கின்ற ஒரு கிறிஸ்தவன் ஆவான். இப்பொழுது, இருளில் இருக்கின்றவர்கள் கீழிருந்து வருகின்ற ஒரு இயல் விளைவு, செல்வாக்கினால் மேற்கொள்ளப் படுகின்றனர். ஒளியாக இருக்கின்றவர்கள் மேலிருந்து வரும் இயல் விளைவு, செல்வாக்கினால் மேற்கொள்ளப் படுகின்றனர். இப்பொழுது, நீங்கள் இந்த வாய்க்கால்களில் ஏதாவதொன்றை நீங்கள் விட்டு வெளியே வருவீர்களானால், அப்போது நீங்கள் ஆவியின் பரிமாணத்திற்குள்ளாக செல்வீர்கள். இதுதான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற, முடிவைக் கொண்டிருக்கின்ற மானிட பரிமாணங்கள் ஆகும். இப்பொழுது, நீங்கள் இந்த வழியில் செல்வீர்களானால்... சற்று கூர்ந்து கவனியுங்கள். நீங்கள் இந்த வழியில் செல்வீர்களானால், முதலாவது பரிமாணமானது மரித்தவர்களின் ஆவிகள் இருப்பவை ஆகும். பேதுரு அதைக் குறித்து பேசுகின்றான்: "பூர்வத்திலே நோவாவின் நாட்களிலே பொறுமையோடே காத்திருந்த போது, கீழ்ப்படியாமற் போய் காவலில் இருக்கின்றன." கேடான புதுபிறப்பை அடையாத மனிதன், அவன் மரிக்கும் போது, அவனுடைய ஆவி இந்த பரிமாணத்திற்குள்ளாக செல்கின்றது. அதற்கு கீழே இருக்கின்ற பரிமாணமானது பிசாசுகளின் இடமாகும். அதற்கு கீழ் உள்ள அடுத்த பரிமாணம் நரகம் ஆகும். நீங்கள் அதை காணும் விதத்திலே நான் உங்களுக்கு ஒரு உவமானதை அளிக்கின்றேன். 50. இப்பொழுது, அந்த பெண்ணிற்கு என்ன சம்பவித்தது? அவள் அந்த பரிமாணத்துக்குள்ளாக சென்றாள், பாவத்தி லும் அக்கிரமங்களிலும் முற்றிலுமாக மரித்துப் போயிருக்கின்ற அந்த மக்களிடமாக அவள் சென்றாள், மரம் எவ்விதம் சாய்கின்றதோ, அந்த பக்கத்தில் தான் அது விழும் என்று தான் அவர்களெல்லாரும் அறிந்திருக்கின்றனர். ஆகவே அந்த பரிமாணத்துக்குள்ளாக அவள் உட்புகுந்தாள், மரித்தவர்களின் ஆவிகளிடமாக பேசிக் கொண்டிருந்தாள். இப்பொழுது, இந்த வழியாக செல்பவன், முதல் காரியம் என்னவென்றால் மரித்து மறுபடியுமாக உயிரோடெழுந்த மனிதனுடைய ஆவி, கிறிஸ்து, அந்த பரிசுத்த ஆவி. அது தான் விசுவாசிக்கு இயல் விளைவை, செல்வாக்கை செலுத்துகிறது, மேலே செல்லுதல். அடுத்ததாக தூதர்கள். அதற்கு அடுத்தத்தாக பரலோகம் தாமே, மூன்றாம் வானம் உள்ளது. ஆமென். ஓ, என்னே. நான் ஒன்றைக் காண்கின்றேன், அது மகிமையானதாக இருக்கின்றது. இயேசு கல்வாரியில் நம்முடைய பாவங்களுக்காக கிருபாதாரபலியாக மரித்த போது, அவர் ஒரு மனிதனாக மாத்திரம் மரிக்கவில்லை ஆனால் ஒரு பாவியாக மரித்தார், அது அவருடைய பாவத்தினால் அல்ல, ஆனால் என்னுடைய மற்றும் உன்னுடைய பாவங்கள் அவரை இழந்து போனவர்கள் இருந்த இடத்திற்கு அவரை அனுப்பினது. அவர் அங்கே கல்வாரியில், இரண்டு குற்றவாளி களுக்கு இடையில் தொங்கிக்கொண்டு, "என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்று கதறி மரிப்பதை என்னால் காண முடிகின்றது. அவர் ஜீவனை விட்டு தம் தலையை கீழே தாழ்த்தின போது, அவருடைய ஆவியானது சென்று, காவலிலுள்ள அந்த ஆவிகளுக்கு, நோவாவின் நாட்களில் நீடிய பொறுமையோடே காத்திருத்தலுக்கு கீழ்படியாதிருந்த ஆவிகளுக்கு பிரசங்கித்தார். வேதாகமம் அவ்விதமாக கூறுகின்றது. 51. இயேசு தாமே இழக்கப்பட்டுப் போனவர்களின் இடங்களுக்கு செல்வதை என்னால் காண முடிகின்றது, அவர் ஒரு கதவண்டை செல்கின்றார். [சகோதரன் பிரன்ஹாம் கதவின் மேல் தட்டப்படுகின்ற சத்தம் போல செய்து காண்பிக்கின்றார் - ஆசி. ] அங்கே அந்த அவர் கதவைத் திறந்தார். மனந்திரும்பாத அந்த ஆவிகள் கூக்குரலிடவும் கதறவும் ஆரம்பித்தன. அவர் "நீங்கள் ஏனோக்கு காலத்தை சேர்ந்தவர்கள், ஏனோக்கு யாரைக் குறித்து ஆவிக்குரிய வெளிப்பாட்டைக் கொண்டிருந்தானோ, அவர் நானே. உலகம் ஜலத்தினால் அழிவதற்கு முன்னர் 'ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடு கூட கர்த்தர் வருகிறார்' என்று யாரைக் குறித்து பிரசங்கிக்கப்பட்டதோ, நானே அவர். கன்னியினால் பிறந்த தேவகுமாரன் நான் தான். இழந்து போன வர்களை மீட்க நான் கல்வாரியில் மரித்துள்ளேன். சர்வாங்க தகன பலியின் கீழே கொடுக்கப்பட்ட ஏனோக்கின் செய்தியை ஏன் நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை?" என்றார். அப்பொழுது அழுகையும் கூக்குரலோடும் பற்கடிப்போடும் கூட அந்த கதவானது மூடப்பட்டது. வழியிலே பிசாசுகள் இருந்தன, அவர் பாதாளத்தின் வாசலுக்கே சென்றார் [சகோதரன் தட்டுகின்றார் - ஆசி.], கதவைத் தட்டினார். அங்கே பிசாசு கதவைத் திறந்தான், "உம், கடைசியில் ஒருவழியாக நீர் இங்கே வந்து சேர்ந்து விட்டீர்" என்று கூறினான். "நான் ஆபேலைக் கொன்ற போது உம்மை பிடித்து விட்டேன் என்று நினைத்தேன். எபிரெய பிள்ளைகளை அக்கினி சூளையில் நான் தூக்கிப் போட்ட போது உம்மை நான் பிடித்து விட்டேன் எண்று நினைத்தேன். நான் யோவானின் தலையை வெட்டின போது நிச்சயமாக நீர் என் கையில் வந்து விட்டீர் என்று நிச்சயத்திருந்தேன். ஆனாலும் கடைசியாக, நீரே இங்கு வந்து சேர்ந்து விட்டீர்" என்றான். 52. அப்போது அவர், "சாத்தானே, நான் பரலோக ராஜ்யத்தின் திறவுகோலை எடுத்து அப்போஸ்தலனாகிய பேதுருவிடம் கொடுத்தேன். ஆனால் மரணத்திற்கும் பாதாளத்திற்கு உரிய திறவுகோலை எடுக்கவே நான் கீழே வந்துள்ளேன், ஆகவே நீ அதை கட்டாமாக கொடுக்கத்தான் போகின்றாய்" என்று கூறுவதை என்னால் கேட்க முடிகின்றது. அவர் தம்முடைய கரத்தை அதை நோக்கி நீட்டுவதை என்னால் காண முடிகின்றது. அப்போது சாத்தான், "ஒரு நிமிடம் சற்று பொறுங்கள், ஒரு நிமிடம் பொறுங்கள்; பாவம் என்கின்றதான ஒரு காரியம் தீர்க்கப்படாமல் உள் ளதே, உமக்கு நினைவிருக்கிறதா, ஏவாள் பாவம் செய்யும் படிக்கு நான் செய்தேன்" என்று கூறினான். அதற்கு அவர், "இதோ பார். நான் கன்னிகையினால் பிறந்த தேவன் குமாரன். கிரயமானது செலுத்தப்பட்டாயிற்று. அங்கே கல்வாரி சிலுவையில் என் இரத்தம் இன்னும் ஈரமாக உள்ளது. இனிமேலும் உன்னால் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது. நான் கட்டுக்குள் எடுத்துக் கொள்ள வந்துள்ளேன்" என்று கூறினார். ஆமென். அவர் தம் கையை நீட்டி சாத்தானின் பக்கவாட்டில் தொங்கிக் கொண்டிருந்த திறவுகோல்களை (keys) பிடுங்கி இழுப்பதை என்னால் காண முடிகின்றது, அதை எடுத்து தம் இடுப்பில் மாட்டி தொங்க விட்டார். பகல் விடிந்து கொண்டிருந்தது, அவர் திரும்பிச் செல்கின்றார். அவர் ஏறி மேலே புறப்படுகிறார். 53. நினைவில் கொள்ளுங்கள், வெளிப்பாட்டை பெற்றிருந்த இன்னும் சில மக்கள் அங்கே இருந்தனர்: யோபு, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, பரதீசில் இருந்த எல்லோருமே உன்னதமான இராஜாவின் பிரசன்னத்திற்குள் செல்ல முடியாதிருந்தது, ஏனென்றால் காளை வெள்ளாட்டுக் கடாவின் இரத்தத்தினால் பாவத்தை எடுத்துப் போட முடியாதிருந்தது; அது பாவத்தை மூட மாத்திரம் செய்தது. ஆனால் இப் பொழுதோ அவர்கள் அங்கே செல்ல முடிந்தது. அந்த உண் மையான பலி, ஜீவனுள்ள தேவனின் மிக உயர்மிக்க, அதி காரமிக்க குமாரன், விடியலின் குமாரன் வந்திருந்தார், மரித்தார், தேவனுடைய இரத்தம் தானே, அவர் தாமே அதன் கிரயத்தை செலுத்தினார். அல்லேலூயா! ஓ, நான் பக்திப் பரவசமாக உணர்கிறேன். கவனியுங்கள். அவர் கதவண்டை தட்டுவதை என் னால் காண முடிகின்றது. ஆபிரகாமும் சாராளும் அங்கே பின்னால் உட்கார்ந்திருந்தனர், யோபு மற்றும் அவர்கள் எல்லோருமே, "இதோ உங்களுக்கு தெரியுமா, சற்று முன்னர் பூமியின் மேல் ஏதோ சம்பவித்திருக்கிறது என்று நினைக்கிறேன்" என்று கூறியிருப்பார்கள். அவர் கதவை தட்டினதை என்னால் கேட்க முடிகின்றது, அப்போது அவ ர்கள் கதவைத் திறந்தனர்; ஆபிரகாம் பார்த்து, "சாராளே, இங்கே பார். இதோ அவர் இங்கே இருக்கின்றார். உலகத் தோற்றத்துக்கு முன்னர் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியா னவர் இங்கே இருக்கின்றார்" என்று கூறினான். தானியேல் அங்கே வெளியே எட்டிப்பார்த்து "இதோ சற்று பாருங்கள். நான் பார்த்த, கைகளால் பெயர்க்கப்படாத, மலையிலிருந்து உருண்டு வந்த கல் அது தான்." என்று கூறினான். "அவர் வந்த போது அவர் பாதங்களின் கீழ் உள்ள மேகங்களை போல அவரை நான் கண்டேன்" என்று ஏசேக்கியல் கூறினதை என்னால் கேட்க முடிகின்றது. "என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசி நாளில் பூமியின் மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன்" என்று யோபு கூறுவதை என்னால் கேட்க முடி கின்றது. 54. கோத்திரப் பிதாக்களும் மற்றும் பிதாக்களும் அவருக்கு பதிலளிக்கின்றனர்... அவர்களிடம் அவர் தாமே, "பிள்ளைகளே ஆயத்தமாகுங்கள். நீங்கள் நல்ல விசுவாசத்தின் கீழே மரித்தீர்கள். தேவனால் அருளப்பட்ட வழியில் நீங்கள் வந்துள்ளீர்கள். ஆகவே இப்பொழுது நான் ஒரு வழியை உங்களுக்கு உண்டு பண்ணியுள்ளேன். நீங்கள் உங்கள் அழியாத சரீரங்களை திரும்ப பெறப்போகிறீர்கள். இன்னும் சில நிமிடங்களில் பொழுது விடியப்போகின்றது, ஆகவே நான் பூமியின் மேல் தோன்ற வேண்டும்" என்று கூறுவதை என் னால் கேட்க முடிகின்றது. அப்போது ஆபிரகாம், "போதகரே, நாங்கள் ஒரு சிறு பயணம் செய்யலாமா? அந்த பழைய நகரத்தை மிக விரைவில் சுற்றி பார்த்து, அது எப்படி உள்ளது என்று காண் விரும்புகிறேன்" என்று கூறுவதை என்னால் கேட்க முடின்றது. தானியேல், "நான் தரிசனங்களை கண்ட இடத்தை காண நானும் போய் பார்க்க விரும்புகிறேன்" என்று கூறினான். அவர், "செல்லுங்கள். நான் அநேக நாட்கள் அங்கே இருக்கப் போகிறேன், என் சீஷர்களுடன உரையாடி, தேவனுடைய இராஜ்யத்தை குறித்த காரியங்களைக் குறித்து அவர்களுக்கு அறிவுறுத்தப் போகிறேன். நான் அவர்களை அபிஷேகிக்க வேண்டும், பரிசுத்த ஆவியானவர் வருகின்றார்...உலகமெங்கும் சுவிசேஷத்தை பிரசங்கிக்கவும் வியாதியஸ்தரை சுகமாக்கவும் அவர்களிடமாகக் கூறப்போகிறேன்" என்றார். பகல் வெளிச்சம் வந்தது. தூதர்கள் கல்லைப் புறட்டி போட்டனர். புரிதலுக்கப்பாற்பட்ட மகத்தான ஒரு சம்பவம் நடை பெற்றது. காய்பா தெருவில் நடந்து செல்வதை என்னால் காண முடிகின்றது, அவன் "உங்களுக்கு தெரியுமா, அந்த மனிதன் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து விட்டார் என்ற சம்பவத்தை குறித்து அவர்கள் கூறுக் கொண்டிருக்கிறார்களே? கடந்த இரவு அவர் நேராக ஒரு கட்டடத்துக்குள்ளாக வந்து, சீஷர்களுடன் பேசினார் மற்றும் காரியங்களைச் செய்தார் என்று அவர்கள் கூறினார்கள் என்று நான் கேள்விப்பட்டேன்" என்று கூறினதை என்னால் காண முடிகிறது. இருதயத்துக்கு இனிய தம்பதிகளாகிய சாராளும் ஆபிரகாமும், இனிமேல் எப்போதுமாக வயது செல்லாதவர்களாக, கைகளை கோர்த்துக் கொண்டு தெருவில் செல்வதை என்னால் காண முடிகின்றது. ஆபிரகாம், "சாராளே, அன்பே, அந்த பழங்கால இடத்தை பார், அந்த இடம் உனக்கு நினைவிருக்கிறதா?" என்று கூறவதை என்னால் கேட்க முடிகின்றது. "ஆமாம். எனக்கு நினைவில் இருக்கிறது. ஆம், சாலேமின் ராஜா வாகிய மெல்கிசேதேக்கை அங்கே சந்தித்து, யுத்தத்தில் கைப் பற்றின கொள்ளைகளில் (spoils) அவருக்கு தசமபாகம் கொடுத்தேன் அல்லவா.' அப்போது காய்பா, "அந்த இளம் தம்பதியர் யார்? அவர்களை நான் எங்கோ பார்த்தது போல உள்ளதே" என்றான். "சாராளே கவனி, அதோ நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்." கிறிஸ்து எப்படி சுவர்களுக்குள்ளாக வந்தாரோ அதே போல அவர்கள் மறைந்தனர்: மகிமைப்படுத்த ப்பட்ட சரீரம். நாற்பது நாட்களுக்கு பிறகு அவர் தம்முடைய சீஷர்களை அங்கிருந்து வெளியே கொண்டு வந்தார், அவர்களை ஆசீர்வதித்து "உலகமெங்கும் போய் இந்த சுவிஷேத்தை பிரசங்கியுங்கள்; நான் திரும்பவும் வரப்போகிறேன். உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்" என்று கூறினார். 55. அவர் மேலே புறப்பட்டார், அவருடனே பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களை தம்மோடு கூட கூட்டிச் சென்றார். அவர் மேலே ஏறிச் சென்ற போது, சந்திரனைக் கடந்து, நட்சத்திரங்களைக் கடந்து, சூரியனைக் கடந்து சென்றார், பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் அவரை பின்தொடர்ந்து சென்றனர். வேதாகமம், "சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி மனுஷர்களுக்கு வரங்களை அளித்தார்" என்று கூறுகின்றது. அவர்தாமே தூதர்களையும், பிரதான தூதர்களையும் கடந்து செல்வதை என்னால் காண முடிகிறது, அவர் மண்டலங்களுக்குள்ளாக செல்வதையும்... புதிய எருசலேம் தெரிய ஆரம்பிக்கிறது. தாவீதின் தீர்க்கதரிசனத்தை அறிந்திருந்த அந்த பழைய ஏற்பாடு பரிசுத்தவான்கள், "வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துகள் அநாதி கதவுகளே உயருங்கள், மகிமையின் ராஜா உட்பிரவேசிக்க விடுங்கள்" என்று கூறுவதை என்னால் கேட்க முடிகின்றது. பின்னால் இருந்த தூதர்கள், "யார் இந்த மகிமையின் ராஜா?" என்று கூறினதை என்னால் கேட்க முடிகின்றது. அதற்கு பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள், "சேனைகளின் கர்த்தர், அவர் யுத்தத்தில் பராக்கிரமமுள்ள கர்த்தராமே" என்று கூறினர். அந்த தூதன் பொத்தானை அழுத்தினான்; வாசல்கள் மேலே உயர்ந்து சென்றது; இயேசுவும் பழைய ஏற்பாடு பரிசுத்தவான்கள் நேராக அந்த எருசலேம் நகரத்திற்குள்ளாக நடந்து சென்றனர். அந்த ஜெயவீரர் மற்றும் எல்லா பரிசுத்தவான்களும் அவரைப் பின்தொடர்ந்தனர், சிங்காசனம் வரைக்குமாக நடந்து சென்று அவர்களை முன்னிருத்தி, "பிதாவே, இதோ அவர்கள்" என்று கூறினார். அவர், "என் சிங்காசனத்திற்கு ஏறிவாரும், நான் உம்முடைய சத்துருக்களை உமக்கு பாதப்படியாக்கிப் போடும் வரைக்கும் நீர் என்னுடைய வலது பாரிசத்தில் உட்காரும்" என்று கூறி னார். அல்லேலூயா. 56. ஆவிக்குரிய வெளிப்பாட்டை உடையவர்களாயிருந்து, தேவனுடைய வார்த்தையின் பேரில் விசுவாசம் வைத்து, இயேசு வருவார் என்று விசுவாசித்து இருந்த மக்களுக்கு அவர் நிச்சயமாக வந்தார். இன்றும் அதே காரியத்தை தான் விசுவாசிக்கின்றனர், அவர் மறுபடியும் வரப்போகின்றார் என்று விசுவாசிக்கின்றனர். இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்ற ஆவிக்குரிய வெளிப்பாட்டை உடையவர்களாக நாம் இருக்கின்றோம். அவர் வல்லமை இப்பொழுது இங்கே இருக்கின்றது. அவருடைய ஆவி இப்பொழுது இங்கே இருக்கின்றது. அவருடைய சுகமளித்தல் இப்பொழுது இங்கே இருக்கின்றது. அவருடைய இரட்சிப்பு இப்பொழுது இங்கே இருக்கின்றது. நமக்கு தேவையாயிருக்கின்ற எல்லா காரியமும் சரியாக இப்பொழுது இங்கே இருக்கின்றது, பரிசுத்த ஆவியானவர் சரியாக இப்பொழுது இங்கே கட்டடத்துக்குள்ளாக அசைந்து சென்று கொண்டிருக்கின்றார், ஒவ்வொரு பாவியையும் அவர் இரட்சிப்பார், ஒவ்வொரு விசுவாசியையும் அபிஷேகிப்பார், ஒவ்வொரு வியாதியஸ்தரையும் சுகப்படுத்துவார். "இந்த கல்லின் மீது என் சபை யைக் கட்டுவேன். பாதாளத்தின் வாசல்களை அதை மேற் கொள்வதில்லை." ஆமென். ஓ, என்னே, நான் பிரசங்கம் செய்ய வேண்டும் என்று உணர்கிறேன். கவனியுங்கள், கடிகாரம் வேகமாக ஓடிக் கொண்டிருப்பதை என்னால் காணமுடிகின்றது. அடுத்ததாக ஒரு பெரிய ஜெப வரிசையானது இருக்கின்றது. ஆனால் ஒ, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய ஆவிக்குரிய வெளிப்பாட்டை தேவன் தம்மைத்தாமே மானிட இருதயத்துக்கு வெளிப்படுத்துகின்றார் என்று விசுவாசிக்கிறீர்களா. நாம் நம்முடைய தலைகளை தாழ்த்தி ஜெபிப்போமா. 57. எங்கள் பரலோகப் பிதாவே, [ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி.) அற்புதமான கர்த்தராகிய இயேசுவைக் குறித்தும், இரத்தம் சொட்டும் பலியாகவும், தேவ ஆட்டுக்குட்டியானவராக எப்படியாக அவர் வந்தார் என்றும், உலகத்தின் பாவத்தை எடுத்துப் போட வந்தார் என்பதைக் குறித்து நாங்கள் இன்று நினைக்கையில், அந்த பழைய ஏற்பாட்டின் பரிசுத்தவான்கள் இப்பொழுது எப்படியாக காணப்படுகின்றனர். நம்மையல்லாமல், அவர்களால் பூரணராக முடியாது, ஆகவே நாம் தேவனுடைய வார்த்தையை விசுவாசிக்கும் படியாக அவர்கள் நம் பேரில் தான் சார்ந்திருக்கிறார்கள். வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள் அவர்கள் சொஸ்தமாவார்கள் என்று வேதவாக்கியங்களில் எழுதப் பட்டிருக்கிறது என்று நான் விசுவாசிக்கிறேன். அது தானே தேவனுடைய வார்த்தையினுடைய ஆவிக்குரிய வெளிப் படுத்தப்பட்ட சத்தியம் ஆகும். அது ஊக்குவிக்கப்பட்ட ஒன்று நான் விசுவாசிக்கிறேன். அந்த அடிப்படையில் தானே அந்த அதே விதமாக அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். பிதாவே, நீர் தாமே இங்கே இன்றிரவு வியாதியுள்ளவர்களையும் மற்றும் தேவையுள்ளோர் ஒவ்வொருவரையும் சுகப்படுத்த வேண்டும் என்று நான் ஜெபிக்கின்றேன். கர்த்தாவே, அதை அருளும். இன்றிரவு, உம்மை அறியாதிருக்கிற, அவர்களுக்குள்ளாக இந்த நம்பிக்கையை கொண்டிராமல், வழி விலகியிருக்கிற வர்களையும் ஆசீர்வதியும். தேவனுடைய குமாரனாகிய இயேசு அவர்களை நேசிக்கிறார் என்றும், அவரை அவர்கள் ஏற்றுக் கொண்டு மற்றும் மறுபடியும் பிறந்தால் மாத்திரமே அவர்களை இரட்சிப்பீர் என்றும் அவர்களுக்கு இன்னுமாக அவர்களுக்கு வெளிப் படுத்தப்படவில்லை. கர்த்தாவே, இதை அருளும். வழி விலகிப்போயிருக்கிற மனிதனை, வழிபோக்கன், திருவசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினாலும் சுத்தம் செய்யப்பட, ஜலத்தினால் வேறு பிரிக்கப்பட கொண்டு வாரும். ஒருக்கால் இன்றிரவு, உம்முடைய ஆவியானவர் தாமே அவரிடமாக புரிதலுக்கு அப்பாற்பட்ட விதத்தில் பேசினீர், "பலவீனமுள்ள பிள்ளையே, இன்றிரவு வா. வா, வந்து இரட்சிக்கப்படு. நான் என் விரிந்துள்ள கரங்களுடன் நின்று கொண்டிருக்கிறேன், இழந்து போகப்பட்டவரை இரட்சிக்க, அன்பில்லாதவர்களை அன்புள்ளவர்களாக்க ஆயத்தமாக விருப்பமுடையவராக, காத்துக் கொண்டிருக்கிறேன்" என்றீர். கர்த்தாவே, இதை அருளும், அவருடைய நாமத்தினாலே இதை நாங்கள் கேட்கின்றோம். 58. நாம் நம்முடைய தலைகளை தாழ்த்தியிருக்கையில், இங்கே கட்டடத்தில் யாராவது கிறிஸ்துவுக்கு வெளியில் இருப்பீர்களானால் உங்கள் கரங்களை உயர்த்தி "எப்படியாயினும், எவ்விதத்தினாலும், தேவனே, கர்த்தராகிய இயேசு வின் சம்பவமானது உண்மை என்று நான் இப்பொழுது என் இருதயத்தில் விசுவாசிக்கின்றேன். அவரை ஏற்றுக் கொள்ள நான் என் கரத்தை உயர்த்துகின்றேன்" என்று கூறு ங்கள். நீங்கள் உங்கள் கரத்தை தேவனிடமாக உயர்த்துவீர்களா? வாலிப மனிதனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. பெண்ணே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஐயா, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அங்கே பின்னால் இருக்கின்ற பெண்மணி, ஸ்பானிஷ் பெண்மணி, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. எங்கோ ஓரிடத்தில், நீங்கள் தானே...?... அங்கே பின்னால் இருக்கின்ற வாலிபப் பெண்ணே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. அங்கே மூலையில் இருக்கின்ற பெண்மணி, உங்களை என்னால் காண முடிகின்றது. ஐயா, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக; அங்கே கரத்தை உயர்த்தியுள்ள வயது சென்ற மனிதரை என்னால் காண முடிகின்றது. பெண்ணே, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக, உங்களை என்னால் காண முடிகின்றது, அந்த வயது சென்ற பெண்மணி. இங்கே கரத்தை உயர்த்தி இருக்கின்ற வயதான மனிதர், தேவன் அந்த மனிதரை ஆசீர்வதிப்பாராக. அது அருமையானது. அங்கே மேலே பால்கனியில் வலது பக்கத்தில் இருக்கின்றவர், ஐயா, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சிறிய பெண்மணியே தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. வலது பக்கத்தில் உள்ள ஒருவர்? ஐயா, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக; கரத்தை நான் காண்கின்றேன். இன்னும் சிலர், "இப்பொழுது நான் கர்த்தராகிய இயேசுவை ஏற்றுக் கொள்ள விரும்புகிறேன்" என்று கூறுங்கள். பையன்களே, தேவன் உங்க ளை ஆசீர்வதிபாராக; உங்களை என்னால் காண முடிகின்றது. வாலிபப் பையனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக; உன்னை என்னால் காண முடிகின்றது. அங்கே பால்கனிகளில் இடது பக்கத்தில் இருப்பவர்கள், சீக்கிரமாக, அப்படியே இருங்கள். ஆம், தேவன், உன்னை, உன்னை, உன்னை, உன்னை மற்றும் உன்னை ஆசீர்வதிப்பாராக. அப்... அக்கறையுடனும் கரிசனையுடனும் இயேசு அழைக்கின்றார், ஓ, பா... (இப்பொழுது நீ வருவாயா? ஐயா, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இன்னும் யாராவது வருவீரா? யாராவது ஒருவர், உங்கள் கரத்தை உயர்த்துவீர்களா? வாலிபப் பெண்ணே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக....?..... உங்களைக் காண்கிறேன். வாலிப மனிதனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக; உன்னைக் காண்கிறேன். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங் களை ஆசீர்வதிப்பாராக. ஐயா தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சகோதரியே, உங்களை ஆசீர்வதிப்பாராக, உங்கள் கரத்தை நான் காண்கிறேன்.) ஓ பாவியே வீட்டிற்கு வா. (இதை கேட்டுக் கொண்டிருக்கின்ற உங்களை தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, தேவன் உங்கள் இருதயத்தை ஆசீர்வதிப்பாராக.) வீட்டிற்கு வா வீட்டிற்கு வா, (நீங்கள் என்ன செய்ய வேண்டியவர்களாக இருக்கிறீர்கள்? விசுவாசித்து வாருங்கள், ஏற்றுக் கொள்ளுங்கள். விசுவாசியுங்கள். விசுவாசத்தைக் கொண்டு நீங்கள் இரட்சிக்கப்படுகிறீர்கள், கிருபையின் மூலமாக, எந்த மனிதனும் பெருமை பறை சாற்ற ஏதுவில்லாமல் கிரியைகளினாலே இரட்சிக்கப் படவில்லை. விசுவாசித்து வாருங்கள், ஏற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் கரத்தை உயர்த்தி "பிதாவே, என்னை நினைவுகூரும்" என்று கூறுவது மாத்திரமே. அவர் அதைச் செய்வார்.) அக்கறையுடனும் கரிசனையுடனும், இயேசு (அவர் உங்கள் இருதயத்துடன் பேசுவாரானால், நான் ஜெபத்தை ஏறெடுக்கையில் "கர்த்தாவே, அது நான் தான்" என்று கூறிக் கொண்டே உங்கள் கரத்தை மாத்திரம் உயர்த்துவீர்களா?) வா..... 59. கடைசி காலமானது முடிவடையும் தருணத்தில் உள்ளது என்று தேவனுடைய ஆவியானவர் தாமே உங்களுக்கு வெளிப்படுத் தியுள்ளாரா? சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, உங்கள் கரத்தை நான் காண்கிறேன். கடைசி காலத்தின் முடிவானது அருகாமையில் உள்ளது. உலகத்தின் முடிவு அருகாமையில் உள்ளது என்று விஞ்ஞான உலகம் கூறுகின்றது. எந்த மணி நேரம் என்று தெரியாது. காலையிலே இந்த நகரத்திலே பனை மரத்தின் ஒரு சிறு இலை கூட இருக்காது என்று இங்கே உள்ளவர்களுக்கு தெரிந்தால் எப்படி இருக்கும்? அங்கே இருக்கின்ற அந்த பெரிய விஞ்ஞான பரிசோதனை கூடத்திலிருந்து அந்த அணுவில் சிலவற்றை வெளியே விட்டால் என்ன சம்பவிக்கும், உலகம் முழுவடும் ஒரே கீச்சென்று பலத்த சத்தத்துடன் ஓடும், வானொலி சத்தமானது...?... பிறகு எல்லாவிடத்திலும் தூசியைத் தவிர ஒன்றுமே மிச்சம் இருக்காது. நீங்கள் கடந்து போயிருப்பீர்கள். ஒருக்கால் இன்றிரவிலிருந்து ஆயிரம் வருடங்களுக்கு காற்று வீசிக் கொண்டிருக்கும், வெற்றிட உலகத்தில் மிகுந்த ஓலமிடுகிற சத்தத் துடனே காற்று வீசிக் கொண்டிருக்கும், உங்கள் கல்லறையானது மண்ணிலிருந்து வெளியே வந்திருக்கும், உங்கள் பெயர் அதன் மேல் இருக்கும். ஆனால் உங்கள் ஆத்துமா எங்குள்ளது? நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் எங்கோ ஓரிடத்தில் இருக்கப் போகிறீர்கள். நீங்கள் ஒன்றுமில்லாத ஒன்றாகவும் அல்லது எந்த இடத்திலும் இல்லாதிருந்த ஒரு காலம் இருந்தது, ஆனால் நீங்கள் ஏதோ ஒன்றாகவும் அல்லது ஒரு இடத்தில் இருப்பவர்களாக இருக்கும் ஒரு காலம் இனிமேல் இருக்கவே இருக்காது. ஆகவே நீங்கள் செய்ய வேண்டிய ஒரே காரியமானது உங்களை தாமே சரணாகதி அடைந்து உங்கள் கரத்தை உயர்த்தி, "கர்த்தாவே, இது தாமே உமக்கு என்னுடைய அடையாளம். நான் என் கரத்தை உயர்த்தி வருகின்றேன்" என்று கூறுவதே ஆகும். நாங்கள் ஜெபிப்பதற்கு முன்னர் இன்னும் சிலர் உள்ளனரா? நமக்கு ஒரு பெரிய ஜெப வரிசை உள்ளது. தகப்பனே, நான் உங்கள் கரத்தைக் காண்கிறேன், தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இங்கே உள்ள சகோதரனே, தேவன் உங்களிடம் இரக்கமாயிருப்பாராக. அங்கே பின்னால் உள்ள சகோதரன், தேவன் உங்களிடமாக இரக்கமாயிருப்பாராக. அங்கே என் இடது பக்கத்தில் இருப்பவர்கள், உங்கள் கரங்களையும் கூட நான் காண்கிறேன். இன்னும் சிலர் இருக்கிறீர்களா? அங்கே உள்ள சிறிய பையன்களே; தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சிறு பிள்ளை கள் தங்கள் கரங்களை உயர்த்துவதை நான் காண்கிறேன். 60. உங்களுக்கு தெரியுமா, ஒரு சிறு பிள்ளைக்குள் காரியமானது உள்ளது... தேவன் அவர்களுடைய சிறு இருதயங்களுக்கு பேசுகின்றார். இங்கே உள்ள இந்த மனிதனை தேவன் ஆசீர்வதிப்பாராக, தன்னுடைய கரத்தை உயர்த்தியிருக்கின்ற ஸ்பானிஷ் சகோதரன். அங்கே பின்னால் உட்கார்ந்துள்ள வயது முதிர்ந்த மனிதன், ஐயா, தேவன் உங்களை ஆசீர்வதிப்பார். சமாதானமும் வல்லமையும் உங்களுக்கு காத்திருக்கின்றது, நீங்கள் விசுவாசிக்கின்ற அந்த நிமிடம் முதற்கொண்டு அது உங்களுடையதாக இருக்க வேண்டியதாயுள்ளது. அங்கே மேலே பால்கனியில் உள்ளவர்கள், ஆம், அங்கே மேலே உள்ள உங்களை தேவன் ஆசீர்வதிப்பாராக, தேனே நான் உன்னைக் காண்கிறேன். அது ஒரு விதத்தில்... தேவன் இந்த மனிதனை ஆசீர்வதிப்பாராக, இங்கே உட்கார்ந்திருப்பவர், என் சகோதரனே, தேவனுடைய வார்த்தையின் பேரில் மற்றும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சிந்தப்பட்ட இரத்தத்தின் பேரில் தாமே, உங்களுடைய இருதயத்தின் ஆழத்திலிருந்து, நீங்கள் உங்கள் கரங்களை மேலே உயர்த்தியுள்ளீர்கள் என்று நான் நம்புகிறேன், நீங்கள் நித் திய ஜீவனைக் கொண்டிருக்கிறீர்கள், உங்களால் அழிந்து போக முடியாது, கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தனிப்பட்ட இரட்சகராவார் என்கின்ற முழு அறிதலுக்குள்ளாக கொண்டு வந்துள்ளது. 61. உங்களால் அதை வாஞ்சிக்க முடியாது. அந்த வாஞ்சை உங்களுக்குள்ளாக வரும்படியாக தேவன் தான் செய்ய வேண்டும். இதை சற்று சிந்தித்துப் பாருங்கள், யாரோ ஒருவர் உட்கார்ந்திருக்கின்றார், அவரிடமாக பரிசுத்த ஆவியானவர் இது தான் நீ கரத்தை உயர்த்த வேண்டிய நேரமாகும். அப்படியெனில் நீங்கள் அதை வேண்டாம் என்று புறக்கணிப்பீர்களா? பாருங்கள், அதைச் செய்வது பரிசுத்த ஆவி ஆகும். "என் பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான், மற்றும் எல்லா..." என்று இயேசு கூறினார். உங்களை இழுத்துக் கொண்டிருப்பதும் மற்றும் உங்கள் கதவண்டை தட்டிக்கொண்டு, இது தான் அது. இது தான் அது. இப்பொழுது உன் கரத்தை உயர்த்திகூறு...." என்று கூறிக்கொண்டிருப்பது எதுவாயிருக்கிறது. ஆகவே இப்பொழுது நீங்கள், "ஓ, அதை செய்ய எனக்கு விருப்பமில்லை" என்று கூறினால்.... ஓ, என்னே, அப்படியானால் அந்நாளிலே நீங்கள் "ஓ, எனக்கு வர விருப்பமாயுள்ளது" என்று கூறுவீர்கள். அதற்கு அவர், "நீ எனக்கு தேவையில்லை" என்று கூறுவார். இன்றிரவு வாருங்கள். நீங்கள்... நண்பர்களே கவனியுங்கள், கர்த்தராகிய இயேசு எப்பொழுது வருவார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் இன்றிரவு நிறைய பேர் இங்கே உட்கார்ந்துள்ளோம். அடுத்த வருடம் இதே நேரத்தில் ஒருக்கால் நம்முடைய சரீரங்களானது கல்லறையில் மண்ணோடு மண்ணாக மக்கிப்போக ஏதுவுண்டு. இந்த வாலிப பெண்களும் வாலிப மனிதரும், இங்கே இன்றிரவு உட்கார்ந்துள்ளவர்கள், தங்கள் வாலிப வயதில் மிகவும் அழகாக இருக்கலாம், ஆனால் இன்றிலிருந்து ஆறு வாரங்களில், ஒருக்கால் தேவனில்லாமல், கிறிஸ்து இல்லாமல், நம்பிக்கை இல்லாமல், அது அங்கே கல்லறையில் மண்ணில் மக்கிப்போய் அழுகிக்கொண்டிருக்கும்... மரித்து நித்தியத்திற்கு செல்லுதல், இன்றிரவு சரியாக இருக்க, பரிசுத்த ஆவியானவர் உங்களை இரட்சிக்க விரும்புகின்றார். நீங்கள் அதை பெற்றுக்கொள்ள மாட்டீர்களா? 62. இந்த ஒரு காரியம் எனக்குத் தெரியும், ஒரு நாள் வரப் போகின்றது, நாம் இங்கே உட்கார்ந்திருப்பது எவ்வளவு நிச்சயமோ... நாம் தாமே... இங்கே உள்ள ஒவ்வொரு நபரும் சென்று விட்டிருப்பார்கள். அப்பொழுது நான் உங்களு டனே கூட நிற்கவேண்டியவனாக உள்ளேன், நியாயத் தீர்ப்பு வரும் போது, அப்போது பரிசுத்த ஆவியினாவர், "அந்த இரவில் நீ என்ன செய்தாய்?" என்று கூறுவார். நான், "கர்த்தாவே, எனக்கு தெரிந்தவரைக்குமாக சிறந்த விதத் தில் செய்தேன்... நான் போதிய கல்வியறிவு இல்லாமல் இருந்த போதும். நான் அவர்களுக்கு பிரசங்கம் செய்ய விழைந்தேன், கட்டாயமாக வர வேண்டியதாக இருக்கின்ற என்ற தேவனுடைய வெளிப்பாட்டைக் குறித்து அவர்களிடமாக கூற முயற்சி எடுத்தேன். பிதாவே, அப்பொழுது அவர்களில் நிறைய பேர் தங்கள் கரத்தை உயர்த்தினார்கள்" என்று நான் கூறுவேன். உங்கள் ஒவ்வொருவரையும் அவர் அறிந்திருக்கின்றார், அவர் உங்கள் பெயரை எழுதி வைத்துள்ளார். ஓ, நீங்கள் எவ்வளவாக மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நாம் ஒருவர் மேல் ஒருவர் நம் கரங்களைப் போட்டு, களி கூருவோம், ஏனென்றால் அவரை ஏற்றுக் கொண்டீர்கள். ஜெபிப்பதற்கு முன்னர் இன்னும் யாராவது உள்ளனரா? சரி, நாம் நம்முடைய தலைகளை இப்பொழுது பயபக்தியுடன், அமைதியுடனும் தாழ்த்துவோம். ஆத்துமாக்கள் கர்த்தரிடமாக வருகின்றனர். இப்பொழுது, சரியாக நீங்கள் உட்கார்ந்துள்ள இடத்திலிருந்து, உங்கள் கரத்தை உயர்த்தியுள்ள நீங்கள், மற்றும் நீங்கள், ஒருக்கால் உயர்த்தாதவர்கள், தேவன் இப்பொழுது கூறினதை சற்று கற்பனை செய்து பாருங்கள். அவர், "என் வசனத்தை கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு, அவன் அழிந்து போகமாட்டன் அவனுக்கு நித்திய ஜீவன் உண்டு. அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட மாட்டான்" என்று கூறியுள்ளார். நீங்கள் மரணத்தை விட்டு நீங்கி கடந்து விட்டீர்கள், கிறிஸ்து சரியாக இப்பொழுது பாவம் மற்றும் மரணத்திலிருந்து உங்களை விடுதலையாக்கி விட்டார், ஏனென்றால் நீங்கள் அவரை விசுவாசிக்கின்றீர்கள். நீங்கள் அவருடைய வார்த்தையை விசுவாசியு ங்கள். 63. இப்பொழுது, பிதாவே, இங்குள்ள ஒவ்வொரு நபரையும் உம்முடைய கரத்திற்குள்ளாக நான் சமர்ப்பிக்கின்றேன். தங்கள் கரங்களை உயர்த்தி உம்மை ஏற்றுக் கொண்டவர்களை. அன்புள்ள கர்த்தாவே, உம்முடைய குமாரனாகிய கர்த்தராகிய இயேசுவின் சிந்தப்பட்ட இரத்தத்தின் அடிப்படையில் இவர்கள் தங்கள் இருதயத்தைக் கொண்டு உம்மிடமாக வருகின்றனர் என்று எனக்குத் தெரியும். அன்புள்ள பிதாவே, நீர் அவர்களை ஏற்றுக் கொள்வீர் என்று உம்முடைய வார்த்தை கூறுகின்றது. சரியாக இப்பொழுதே அவர்களெல்லாரும் ஏற்றுக் கொள்ளப்பட்டனர் என்று நான் விசுவாசிக்கின்றேன். பிதாவே, அவர்களுக்காக நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன், நானும் அவர்களை நேசிக்கின்றேன். உம்முடைய ஊழியக்காரனாக நான் இவர்களை உம்மிடமாக சமர்ப்பிக்கின்றேன், ஆகவே பரிசுத்த ஆவியா னவர்தாமே அவர்களுடைய வாழ்க்கையை நிரப்பி, இந்த பிரயாணம் முழுவதுமாக அவர்களை வழி நடத்தி, அவர்களுக்கு பிரயாண இரக்கத்தை அளித்து, உம்மாலே தாமே அளிக்கவிருப்பதிலேயே சிறந்ததை அளிக்கும் படியாக, பிதாவே, உம்முடைய வளமிக்க திரளான ஆசீர்வாதத்திலே எடுத்து அளியும் பிதாவே. ஒரு நாளிலே, இன்னும் ஒரு மேலான ஒரு நாட்டிலே, இரட்சிக்கப்பட்டு ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்தினாலே கழுவப்பட்ட ஒவ்வொருவரையும் நான் சந்திப்பேனாக. நாங்கள் ஒன்றாக உட்கார்ந்து அப்பொழுது அதைக் குறித்து பேசுவோமாக. அது வரைக்குமாக, உம்முடைய பரிசுத்த ஆவி தாமே ஒவ்வொருவரையும் வழிநடத்துவதாக, அதை நாங்கள் அவரு டைய நாமத்தில் கேட்கின்றேன், ஆமென். 64. சகோதரியே அது எனக்கு பிடிக்கும்; தொடர்ந்து இசையுங்கள். ஒரு தேசத்தைக் குறித்து கேட்டிருக்கிறோம், தூரத்தில் நதிக்கரையில்... எத்தனைப் பேருக்கு இது தெரியும்... அந்த பாடல் யாருக்காவது தெரியுமா? அது அருமையான பாடல்களுள் ஒன்றாகும் என்று நான் நினைக்கின்றேன். என்னால் அதைப்பாட முடியவில்லை. ஆனால் அது எனக்கு மிகவும் பிடிக்கும். அது அழகான ஒரு பாடல் என்று நினைக்கின் றேன். ஒரு தேசம்... தூரத்தில் ஒரு நதிக்கரையில் அது தாமே - அங்கே நமக்கு வயது சென்ற நிலை இருக்கவே இருக்காது. (எத்தனைப் பேருக்கு அது தெரியும், இப்பொழுது, உங்கள் கரத்தை உயர்த்துங்கள்.) நீங்கள் இங்கே வாருங்கள், சகோதரன் ட்ரேசி, இங்கே வருவீரா? இரட்சிக்கப்பட்டிருக்கின்ற எல்லாருக்காகவும் எங்களுக்காகவும், "வயதாகாது" என்ற பல்லவியை பாடும்படிக்கு நடத்துங்கள், சரி. நமக்கு வயதாகாமல் இருக்கின்ற ஒரு தேசம், நமக்கு வயதாகாது, நமக்கு வயதாகாது, நமக்கு வயதாகாமல் இருக்கின்ற ஒரு தேசம். 65. நாம் திரும்பி மற்றவருடன் கரங்களைக் குலுக்குவோம் ...உங்களுக்கு பக்கத்தில் இருப்பவருடன் இப்பொழுது கையை குலுக்குங்கள், "என் பக்கத்தில் உட்கார்ந்திருப்பவரே, கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நீங்கள் இங்கே இருப்பதற்காக எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக" என்று கூறுங்கள். கர்த்தராகிய இயேசுவை ஏற்றுக் கொள்ளும்படிக்கு தங்கள் கரங்களை உயர்த்தினவர் களுக்கு வரவேற்பு கொடுங்கள். ஓ, என்னே, அற்புதம். ஓ, இந்த விதமான ஒரு கூட்டம் உங்கள் பிடிக்கின்றதா? அது தாமே உங்களுக்கு ஒரு நிச்சயத்தை அளித்து, மிக அருமை யாக உணரும்படிக்குச் செய்து, உங்கள் இருதயங்கள் தாமே... எதுவுமே உங்களை வருத்தமடையச் செய்யாது, எதுவுமே, ஒவ்வொருவருடனும் அன்புடனும் இருங்கள். அது அருமையானதல்லவா? சற்று சிந்தித்துப் பாருங்கள், பரிசுத்த ஆவி, நம்மை வழிநடத்தவும் நமக்கு பாதையை காட்டவும் இப்பொழுது இங்கே இருக்கின்றது. உங்கள் கரங்களை உயர்த்தியுள்ள நீங்கள் தாமே, மறுபடியுமாக உங்கள் கரங்களை உயர்த்தி, "ஓ, நான் இப்பொழுது இன்னும் நலமாக உணர்கிறேன்" என்று கூற முடிகின்றது. உங்கள் கரங்களை உயர்த்துங்கள். எனக்கு... ஓ, அது எனக்கு மிகவும் பிடிக்கும். நாம் "என்றென்றைக்கும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்" என்று கூறு வோமாக. அது அருமையானது. இப்பொழுது, நிச்சயமாக அவர் நம்முடைய வியாதியஸ்தரையும் மற்றும் வேதனையில் உள்ளோரையும் சுகப்படுத்துவார், அவர் சுகமாக்குவாரல்லவா? இப்பொழுது, வரிசையை துவக்குவதற்கான நேரமாகும். இப்பொழுது, நாம் பார்ப்போமாக, ஒரு சிறிய டிக்கெட்டை நான் வைத்திருக்கிறேன். இப்பொழுது, யாராரிடம் ஜெப அட்டை A உள்ளது, A என்ற அட்டை உள்ளவர்கள் எல்லாரும் வாருங்கள். இது தான் முதலாவதாக விநியோகிக்கப்பட்டது. அப்படியானால் A அட்டை உள்ளவர்கள் இங்கே வந்து வரிசையில் நிற்கலாமல்லவா? ஜெப அட்டை A, இங்கே எனக்கு வலது பக்கத்தில் வந்து வரிசையில் நில்லுங்கள். ஆம், அங்கே அந்த சுவற்றண்டையிலிருந்து நில்லு ங்கள், பையன் அவ்விதம் கூறினான், அங்கே ஆரம்பித்து இங்கே வாருங்கள், அது இன்னும் சிறிது நன்றாயிருக்கும். ஜெப அட்டை A வைத்துள்ளவர்கள். 66. இப்பொழுது ஊழியக்காரர்கள் இங்கே உதவிக்காக அழைப்போமானால், உதவிக்காரர்கள் இங்கே வந்தால், நாம் கீழே சென்று ஜெப அட்டை வைத்துள்ளவர்களை வரிசைப்படுத்துவோம். முதலில் ஜெப அட்டை A என்ற வகையை பெற்றிருப்பவர்கள் முதலில் வரட்டும், பிறகு அடுத்ததாக மற்றவர்களையும் வரவழைப்போம். ஓ, என்னே. (சகோதரன் பிரன்ஹாம் யாரோ ஒருவரு டனே பேசுகின்றார் - ஆசி.) ஆம்...?... ஒரு நிமிடம். எல்லாரும் ஒன்று சேர்ந்து அந்த பாடலை பாடுவோமா? இப்பொழுது பாடலாம். நம்பிடுவாய், நம்பிடுவாய் யாவும் கைக்கூடிடும், நம்பிடுவாய், (அவர்கள் மறுபடியும் பிறப்பார்களாக. ) நம்பிடுவாய், என்ன செய்ய வேண்டும் என்று நான் உங்களுக்கு கூறுவேனாக: சக்கர நாற்காலியில் உள்ளவர்கள் இவர்களில் சிலருக்கு ஜெப அட்டைகள் கூட இல்லை. நீங்கள் தாமே நோயாளிகளை சுமக்கும் தூக்கு படுக்கையில் உள்ளவர்களையும் (stretcher) மற்றும் சக்கர நாற்காலியில் உள்ளவர்களையும் அங்கே அப்படியே இருக்கும்படி செய்து, நான் அடுத்த ஜெப அட்டை இலக்கத்தை அழைப்பதற்கு முன்னர், நான் கீழே வந்து அவர்களுக்காக ஜெபிப்பேன், அவர் களிடம் ஜெப அட்டை இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, இப்பொழுது இங்கே உள்ள இந்த தூக்குபடுக்கையில் (stretcher) உள்ளவர்களும், சக்கர நாற்காலியில் உள்ள எல்லாருக்கும் ஜெபிப்பேன். ஆகவே அவர்களை பிரசங்க மேடைக்கு கொண்டு வரவேண்டிய அவசியம் இருக்காது. நேராக இங்கேயே செய்யலாம். முடவர்களும் மற்றும் பிரசங்க மேடையின் மீது ஏறி வர முடியாதவர்களை சரியாக இந்த இடத்திலேயே இருக்கும்படிக்குச் செய்யலாம், நாம் .... 67. சரி, ஜெப அட்டை A உள்ளவர்களை அங்கே சுவற்றுக்கு அருகாமையில் நிற்க வைக்கப்பட்டார்களா? அங்கே உள்ள இடத்தில் நண்பர்களே, உங்களால் முடியுமானால். சரியாக அந்த வழியில், அதினாலே அவர்களாலே அங்கே செல்ல ஏதுவாகும். இப்பொழுது, நாம் அவர்களிடமாக செல்லும் முன்னர், நான் உங்களிடம் ஒன்றை கேட்க விரும்புகிறேன். "விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும்; என் நாமத்தினாலே பிசாசுகளை துரத்துவார்கள்; நவமான பாஷைகளை பேசுவார்கள் சர்ப்பங்களை எடுப்பார்கள், சாவுக்கேதுவான யாதொன்றை குடித்தாலும் அது அவர்களை சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அவர்கள் சொஸ்தமாவார்கள்" என்ற இந்த செய்தியை, அறிக்கையை இயேசு கிறிஸ்துவே கூறினார் என்று எத்தனைப் பேர் விசுவாசிக்கிறீர்கள்? இவை வேதவாக்கியங்கள் தானே? சரி. 68. இப்பொழுது, நாம் இதை விசுவாசிப்போமாக, விசுவாச ஜெபத்தை நாம் ஏறெடுத்து தேவனிடமாக நாம் கேட்கும்போது, தேவன் தம்முடைய வார்த்தைக்கு கடமைப்பட்டுள்ளார், அவர் கடமைப்பட்டுள்ளார் அல்லவா. அவர் தம்முடைய வார்த்தைக்கு கடமைப்பட்டுள்ளார். இப்பொ ழுது, இதை செய்வதன் மூலம், நண்பர்களே, எனென்றால் என்னிடமாக மக்கள்....மிகவும் பரிதாபத்திற்குரிய கோர நிலையில் உள்ளனர்.... அவர்கள் வரிசையில் நிற்க ஆரம்பிக்கையில் நான் உங்களுக்கு ஒன்றை கூற விரும்புகிறேன். இங்கே உள்ள சகோதரன் மூர், சிறிது சமீப காலத்தில் என்னுடன் பின்லாந்து தேசத்தில் இருந்தார். நான் ஒரு சிறிய பெண்ணை பார்த்தேன்; அவர்கள் என்னை இராணுவ வீரர்கள் சூழ உள்ளே கொண்டு சென்றனர். மரித்த ஒரு சிறு பையன் உயிரோடு எழுப்பப்பட்டான். அது சம்பவிப்பதற்கு முன்பு, அது நடப்பதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னதாகவே, இந்த விதமாக காரியம் நடந்தேறும் என்று அதைக் குறித்து இங்கே பீனிக்ஸில் உங்கள் எல்லாரிடமாக கூறினேன். ஆகவே இந்த சிறு பையன் மரித்துப்போய் உயிரோடெழுப்பப் பட்டான். நான் உங்களுக்கு கூறுகிறேன், அவர்கள் எல்லோரும் தெருக்களில் மேலும் கீழுமாக நின்று கொண்டிருந்தனர். அந்த இடங்களுக்கு உங்களால் செல்லவே முடியாது. ஆதலால் சில இராணுவ வீரர்கள் என்னை உள்ளே அழைத்துச் சென்றனர். நான் அங்கே இருந்த ஒரு சிறிய பழைய பல படுக்கைகள் கொண்ட தூங்கும் அறை யின் வழியாக உள்ளே வந்தேன், அதன் வழியாக கட்டடத்திற்குள் வந்தேன். அவர்கள் நான் வருவதற்கு முன்னதாகவே பாடல் பாட ஆரம்பித்து விட்டனர்.... 69. அங்கே ஒரு சிறிய பின்லாந்து சிறுமி வெளியே வந்தாள். அவள் தன் காலில், ஊனமுற்ற கால்களை இறுக பிணைக்கும் காலணியை அணிந்திருந்தாள், ஏனென்றால் தன் காலை அவளால் அசைக்கக்கூட முடியாது. அவளை சுற்றிலும் அந்த பெரிய கருவி பொத்தி கட்டப்பட்டிருந்தது, ஒரு கச்சை, பெல்ட் அவளை சுற்றி கட்டி, அவள் பெரு விரலை அந்த கச்சையுடன், பெல்ட்டுடன் இணைத்திருந்தனர். அதற்கும் மேலாக இரண்டு கக்கதண்டங்களை (crutches) கொண்டு தான் அவள் நடந்தாள், அவளை சுற்றிலும் ஒரு கச்சையை கட்டி, அவளுடைய சிறு தோளை அதனுடன் இணைத்து, அதிலிருந்து ஒரு கயிறு அவள் பாதத்தை சுற்றி கட்டப்பட்டிருக்கும், ஆகவே கால்களினாலே எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை, அவள் கால்களை பிணைக்கும் கருவியானது அவளை விழாமல் பிடித்துக் கொள்ளும், ஆகவே அந்த விதமாகத்தான் அவள் நடந்தாள். மிகவும் பரிதாபத்திற்குரிய ஒருவள், அவளுடைய பாவாடையும் கந்தல் துணியைப் போன்று இருந்தது, அவளுடைய சிறு முடியும் துண்டு துண்டாக வெட்டப்பட்டிருந்தது. அவள் யாரென்று பார்த்தால், பின்லாந்து போரினால் அநாதை ஆன ஒரு சிறுமியாக இருந்தாள் என்று கண்டு கொண்டேன்; அவள் தாயும் தந்தையும் போரில் கொல்லப் பட்டனர். அவள் அந்த பெண்கள் அறையிலிருந்து வெளியே வந்தாள், அவள் என்னைப் பார்த்தாள், அப்போது தான் ஏதோ தவறு செய்து விட்டோமா என்று நினைத்தாள். அந்த பிள்ளை தன் தலையை தாழ்த்திக் கொண்டது, அந்த சிறிய கந்தலான தொங்கிக் கொண்டிருந்த மூடியின் மூலமாக மேலே நோக்கிப் பார்த்தது. அப்பொழுது நான், அந்த சிறிய பெண் என்னிடம் வர விரும்புகிறது" என்று நினைத்தேன். நான் சற்று நின்றேன், இராணுவ வீரர்களோ என்னை தொடர்ந்து செல்லுங்கள் என தள்ள முற்பட்டனர். நான் அப்படியே அங்கே நின்றேன். அப்போது அவர்கள் - என்னால் அவர்களிடமாக பேச முடியவில்லை, ஏனென்றால் அவர்கள் எல்லோரும் ஃபின்னிஷ் பாஷை பேசுகிறவர்கள். 70. ஆகவே அந்த சிறிய பெண், அவள் என்னிடமாக வர விரும்புகிறாள் என்று அப்போது அறிந்து கொண்டேன். ஆகவே நான் அவளை நோக்கிப் பார்த்தேன், அவளை நோக்கி இந்த விதமாக கை அசைத்தேன். அவள் அங்கே வந்தாள், அவள் அக்குளின் கீழாக இருந்த அந்த கக்கதண்டங்கள் கொண்டு நடந்து வந்தாள் (அந்த புகைப்படம் அந்த புத்தகத்தில் உள்ளது,) ஆகவே அவள் அந்த கக்கத ண்டங்களை முன் நீட்டி வர ஆரம்பித்தாள். இப்பொழுது அந்த பிள்ளையை கிட்டே கொண்டு வரவேண்டுமானால், நான் அங்கே நின்று கொண்டேன், அவள் இந்த விதமாக வர ஆரம்பித்தாள், நான் இருக்கும் இடமட்டுமாக வந்தாள். வந்த உடனே கீழே குனிந்து என் கோட்டின் ஓரத்தை பிடித்து எடுத்து, என் கோட்டின் பாக்கெட்டில் முத்தம் கொடுத்தாள். பிறகு அந்த கட்டைகளை கொண்டு என்னை விட்டு சற்று அப்புறம் தள்ளி நின்றாள், தன் சிறிய துணியை இழுத்து, "கீட்டோஸ்" என்று கூறினாள். அதற்கு ஃபின்னிஷ் பாஷையில் உங்களுக்கு நன்றி என்று அர்த்தம். அவள் மேல் நோக்கிப் பார்த்தாள், அவள் சிறிய உதடுகள் அந்த விதமாக துடிப்புடனே துடித்து அசைந்தது, அவளுடைய சிறிய குழந்தையான நீல நிற கண்களிலிருந்து கண்ணீர் புரண்டோடியது, மேலும் அவள் "கீட்டோஸ்' என்று கூறினாள். ஓ, என்னே, என் இருதயம் ஏறக்குறைய உடைந்தது. அப்போது நான் நோக்கிப் பார்த்தேன், நான் நினைத்தேன்...."தேனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. நான் என்ன கூறுகிறேன் என்று உன்னால் கேட்க முடியாது, ஆனால் அவர் தாமே உன் சிறு சரீரத்தை சுகமாக்குவாராக" என்று கூறினேன். நான் அந்த விதமாக நோக்கிப் பார்த்தபோது.... இப்பொழுது, அவளுடைய மரியாதைகள், எனக்கல்ல, ஆனால் தேவனுக்கே செலுத்தினாள்..... 71. பாருங்கள் எப்படி உங்களாலே அணுக வேண்டிய விதமாக இருக்கிறது என்றால்.... ஆம், அவர்கள் தாமே வெண்கல சர்ப்பத்தின் மூலமாக அதை அணுகினார்கள். அவர்கள் அதை தீர்க்கதரிசிகள் மூலமாக அணுகினார்கள். அவர்கள் அப்போஸ்தலர்கள் மூலமாக அதை அணுகினார்கள். அவர்கள் அதை பிரசங்கிகள் மூலமாக அணுகினார்கள், ஆகவே (புரிகின்றதா?) ஒரு பாத்திரத்தின் (instrument) மூலமாக. ஆகவே அவன்.... அந்த சிறு பெண், நான் அவளை நோக்கிப் பார்த்து அவளிடமாக பேச முயற்சித்துக் கொண்டிருந்தேன், நான் பார்த்தேன், ஒரு தரிசனம் வந்து கொண்டிருந்ததை நான் கண்டேன். அந்த தரிசனத்திலே அந்த பிள்ளையானது ஊனமுற்றவர்கள் அணியும் கருவி, உபகரணம் எதுவுமே இல்லாமல் நடந்து சென்று கொண்டிருந்தது. இப்பொழுது, என்னால் அதை அவளிடமாக கொண்டு சென்று சொல்ல முடியவில்லை: அவளிடமாக அதை கூற முடியவில்லை. அப்பொழுது அந்த இராணுவ வீரர்கள் உள்ளே செல்லும்படிக்கு என்னை தள்ளிக்கொண்டிருந்தனர், சகோதரன பாக்ஸ்டர் வந்து என்னை அழைத்துச் சென்றார். சகோதரன் மூர், அந்த இரவு நீங்கள் அங்கே இருந்தீர்கள் என்று நினைக்கிறேன். ஆகவே நான் மேடைக்கு மேல் சென்ற போது... வியாதியஸ்தருக்காக ஜெபிக்க ஆரம்பித்தோம், அப்போது பரிசுத்த ஆவியானவர் அங்கே பின்னால் இருந்த மக்களிடமாக பேச ஆரம்பித்தார், அவ ர்கள் மொழியிலே எங்களாலே பேச முடியாதிருந்தது..... அவர்களிடமாக அவர்கள் யார் என்றும், எங்கிருந்து வந்தனர் என்றும், அவர்களிடம் இருந்த பிரச்சனை என்ன என்றும், அதைப் போன்று வெறும் இரண்டு அல்லது மூன்று காரியங்களை மாத்திரம் கூறினார், உடனே அவர்கள் தங்கள் ஊனமுற்றோர் உபகரணங்கள், கக்கதண்டங்கள் மற்றும் காரியங்களை போட்டு குவித்தனர், அப்படியே நடந்து சென்றனர். அவர்கள் எளிமையான விசுவாசிகள். 72. பிறகு அவர்கள் என்னை வரிசைக்கு வெளியே கொண்டு செல்ல ஆரம்பித்தனர்; அப்போது நான், "இன்னும் சிலருக்கு நான் ஜெபிக்க என்னை விடுங்கள்" என்று கூறினேன். ஆகவே தேவனுடைய செயலால், அடுத்ததாக மேடையின் மீது அந்த பிள்ளை தான் வரவிருந்தது. அவள் வந்த போது, நான் எனக்கு மொழிபெயர்ப்பு செய்த திருமதி ஐசக்சனிடம் "இப்பொழுது நான் என்ன கூறப்போகிறேனோ அதை மாத்திரமே கூறுங்கள்" என்று சொன்னேன். அப்பொழுது நான், "இனியவளே, அங்கே வெளியே நீ கொண்டிருந்த விசுவாசத்திற்கு தேவன் பலன் அளித்துள்ளார். அவர் அங்கேயே உன்னை சுகமாக்கினார். நீ சென்று உன் மேலுள்ள ஊனமுற்றோர் அணியும் உபகரணங்களை கழற்றிப் போடு. திரும்பி வந்து எங்களிடமாக அதை காண்பி" என்று கூறினேன். வேறொருவருக்கு நான் ஜெபம் செய்ய ஆரம்பித்தேன். சில நொடிகளில், அந்த மனிதன் அவள் போட்டிருந்த ஊனமுற்றோருக்கான உபகரணங்களை கழற்றினார், கால் பெரு விரலில் இருந்த கருவி மற்றும் எல்லா உபகரணங்களையும் கழற்றினார், உடனே அவள் மேடை முழுவதுமாக அவளால் முடிந்த வரைக்குமாக வேகமாக ஓடினாள், அந்த ஊனமுற்றோர் காலணிகள் கருவிகள் எல்லாவற்றையும் தன் தலை மேல் வைத்துக் கொண்டு ஓடினாள், மிகவும் களிகூர்ந்து கொண்டிருந்தாள். என்ன அது? நான் அவளை சுக மாக்கினேனா? இல்லை ஐயா. எது அவளை சுகமாக்கினது? தேவனுடைய வார்த்தைக்கு அவளின் பயபக்தியும் மற்றும் அணுகுமுறையுமே சரியாக அதைச் செய்தது. பாருங்கள்? உலகத்திலேயே பெரிய மாய்மாலக்காரனாக நான் இருந்திருந்தாலும் கூட, எப்படியாயினும் தேவன் அந்த பிள்ளையின் விசுவாசத்தை கனம் பண்ணியிருப்பார். ஆகவே அநேக காரியங்கள் செய்யப் பட்டிருந்ததை அவள் கண்டிருந்தாள், அந்த பரிதாபத்திற்குரிய சிறிய பெண், உங்களுக்கு அருகாமையில் அவளால் வர முடிந்தால் அது நடந்தேறும் என்று அவள் விசுவாசிக்கும் வரைக்குமாக அப்படிச் செய்தாள். 73. கவனியுங்கள், நீங்கள் "பிரசங்கியே அது வேதப்பூர்வமானதா?" என்று கேட்கலாம். ஆம், ஐயா. ஒரு மீனவனின் நிழலில் அவர்கள் கிடத்தப்பட்டார்கள் என்று வேதாகமத்தில் இருப்பது எனக்கு நினைவில் இருக்கிறது. அவர்கள் மீது அவனுடைய நிழல் மாத்திரமே பட்டு கடந்து சென்றது, ஏனென்றால் அவன் தேவனுடைய ஊழியக்காரன். அவன் ஜனக்கூட்டத்தில் இருந்து அனனியா மற்றும் சப்பிராளிடமாக நேரடியாக பேசினான், அவர்களும் அவன் தேவனுடைய ஊழியக்காரன் என்று அறிந்திருந்தனர். அந்த அப்போஸ்தலனின் நிழல் மாத்திரம் அவர்கள் மேல் கட ந்து சென்றது, ஒவ்வொருவரும் சுகமாக்கப்பட்டனர்- முழு மையாக குணமாக்கப் படுத்தப்பட்டனர். அது சரியல்லா? நிச்சயமாக அது வேதப்பூர்வமானதாகும். 74. இப்பொழுது, நாம் இப்பொழுது ஜெபம் செய்யும் போது, உங்களில் ஒவ்வொருவரும் இப்பொழுது, நீங்கள் பிரசங்க மேடையின் மீது வரும்போது... ஆம், உங்களுக்கு தெரியும், ஒரு நபருக்கு பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் என்னால் எடுத்துக் கொள்ள முடியாது, என்னால் முடிந்த வரைக்கும் நான் ஜெபிக்கப்போகிறேன், என் அருமை சகோதரனே. "என் தாய் அங்கே நின்றிருந்தால் எப்படி இருக்கும்? என் மனைவியாக இருந்தால் எப்படி இருக்கும்? என் குழந்தை நிற்கின்றது என்றால் எப்படி இருக்கும்? என் சகோதரனோ அல்லது தகப்பனாக இருந்தால் எப்படி இருக்கும்?" என்று சற்று நினைத்துப் பாருங்கள். அதை குறித்து நீங்கள் மிக உத்தமமாக யாராவது நினைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆகவே இப்பொழுது, அது யாரோ ஒருவருடைய தாயாக, தகப்பனாக, மனைவியாக இன்னும் பிறவற்றாக இருக்கலாம். அது யாரோ ஒரு நபராக இருக்கிறார்கள், தேவன் அதற்கு என்னை உத்தரவாதியாக கணக்கு கேட்பார். பாருங்கள்? ஆகவே அதற்கு மிகுந்த ஆழமான பயபக்தியும் உத்தமமும் இருக்க வேண்டும். ஆகவே என்னால் செய்ய முடிகின்ற ஒரே ஒரு காரியம் என்னவென்றால், ஒரு வேளைக்கு ஒருவரை மாத்திரம் முன்னே அழைத்து அவ ரை தனியே நிறுத்தி ... ஏன் என்ற காரணத்தை அல்லது அதைப் போன்றவ ற்றை உங்களிடமாக அவர் கூறலாம், ஆனால் இப்பொழுது உங்கள் அறிக்கையை செய்யுங்கள். நீங்கள் எல்லாவற்றை யும் செய்வீர்கள் என்றும், அவருக்காக நீங்கள் ஜீவிப்பீர்கள் என்றும், அவர் தாமே இங்கே மேடையின் மீது வருகையில் அவரை விசுவாசிப்பீர்கள் என்றும், "வியாதியஸ்தர் மீது கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்" என்று அவர் கூறியுள்ளதை நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என்று தேவனிடமாக கூறுங்கள். நீங்கள் தாமே அதைச் செய்யும் போது... இப்பொழுது, கவனி யுங்கள் ஒவ்வொரு வரும், நீங்கள் இந்த இடத்தை கடக்கும் போது, அது... இது உங்களுக்கு தொடர்பு கொள்ளும் இடம் மாத்திரமே, நீங்கள் இங்கிருந்து செல்லும் போது, புறப்பட்டுச் சென்று, "கர்த்தராகிய இயேசுவே, உமக்கு நன்றி; அது என்றென்றுமாக முடிக்கப்பட்டு விட்டது" என்று கூறுங்கள். இங்கே வரும்போது, உங்கள் இருதயத்திலே அதை விசுவாசியுங்கள். சித்திரம் வரையப்பட்டுள்ள குல மரபு கோலை (totem pole) அல்லது ஏதோ ஒன்றை தொட வருவது போல வரவேண்டாம், தேவனுடைய வார்த்தையின் பேரிலும், அதை நீங்கள் ஏற்றுக் கொண்டீர்கள் என்பதின் பேரிலும் விசுவாசம் கொண்டு வாருங்கள். நீ இதை செய் என்று அவர் எனக்கு கூறினதின் பேரிலும், தேவனு டைய வார்த்தையை அடிப்படையாக கொண்டு அதன் பேரிலும் உங்கள் மீது நான் கைகளை வைக்கின்றேன். அப் போது சுகம் பெறத்தான் வேண்டும். அப்படித் தானே, நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? 75. இப்பொழுது, ஜெப அட்டைகள்... அடுத்ததாக இருப் பது அட்டை "E" ஆகும். எத்தனைப் பேரிடம் ஜெப அட்டை "E" உள்ளது, உங்கள் கரத்தை உயர்த்துங்கள். இப்பொழுது, அந்த இடம் சென்று, அல்லது பின் சென்று, இதை சுற்றிலும் வந்து, இங்கே வரிசையில் நில்லுங்கள். ஜெப அட்டை "E". நீங்கள் அங்கே மேலே செல்லும் போது, எல்லோரும்... சகோதரனே ட்ரேசி, இங்கே வாருங்கள், "நம்பிடுவாய்" என்று பாடுங்கள். படுக்கையில் கிடத்தப் பட்டிருக்கிறவர்களுக்காக (stretcher) நான் ஜெபிக்க விரும்புகிறேன். (சகோதரன் ட்ரேசி "நம்பிடுவாய்" என்று பாடுகின்றார், அதே நேரத்தில் சகோதரன் பிரன்ஹாம் ஜெபிக்கின்றார் - ஆசி] 2